ரோஹித் மற்றும் அஷ்வின் இந்த காரணத்திற்காக தான் அணியில் சேர்க்கப்படவில்லை – ரஹானே விளக்கம்

Rahane
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது.

ind1

- Advertisement -

இந்த போட்டியில் அனுபவ வீரர்களான அஸ்வின், ரோகித் சர்மா மற்றும் சஹா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் குல்தீப் யதாவிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடித்தார். ரோகித்க்கு பதிலாக அனுமா விஹாரி இடம் பிடித்தார்.

இந்நிலையில் ஆடும் லெவனில் ரோஹித் மற்றும் அஷ்வின் இடம் பெறாததற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது : ரோகித் சர்மா மற்றும் அஷ்வின் ஆகிய அனுபவ வீரர்கள் அணியில் இருப்பது கஷ்டம் தான். இருப்பினும் அணி நிர்வாகம் அணியின் நலன் கருதி எப்போதும் சிறந்த முடிவை எடுக்கின்றனர்.

அதன்படி பிட்சின் தன்மைக்கு ஏற்ப ஜடேஜா சிறப்பாக பந்துவீசுவார் என்று நம்பியதால் அஸ்வினுக்கு பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஆறாவது பேட்ஸ்மேன் ஒருவர் இந்த போட்டிக்கு தேவைப்படுவதால் பேட்டிங் மற்றும் பந்து வீசும் விஹாரியை ரோஹித்துக்கு பதிலாக தேர்வு செய்திருக்கிறார்கள். இதில் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோர் இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பதால் இந்த முடிவு நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று ரஹானே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement