கொரோனா நிதியுதவி : சத்தமில்லால் தனது பணத்தை முதல்வர் வங்கிக்கணக்குக்கு போட்டு விட்ட ரஹானே – ரசிகர்கள் வாழ்த்து

Rahane
- Advertisement -

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து பல கோடிகள் இதுவரை நிவாரண நிதியாக இந்திய அரசாங்கம் செலவழித்து வருவதால் தற்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை களைய ஒவ்வொரு மாநில அரசும் மக்களிடம் தானாக முன்வந்து நிதி உதவி வழங்கலாம் என்று கோரிக்கை வைத்தது.

corona

- Advertisement -

மேலும் பிரதம மந்திரி மோடி அவர்களின் நிவாரண வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில்துறை உரிமையாளர்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் என அனைவரும் தங்களது நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் ஆன பிசிசிஐ சார்பில் 51 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 52 லட்சம் (முதல்வர் நிவாரண நிதி 21, பிரதமர் நிவாரண நிதி 31) அளித்து பிரதமர் மற்றும் ரசிகர்களின் பாராட்டினை பெற்றார்.

Raina-1

மேலும் சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், கங்குலி 50 லட்சம், கம்பீர் 50 லட்சம் என அவர் அவர்கள் தங்களது அளவிற்கு ஏற்ப பணத்தினை நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியும் ஒரு லட்சம் வழங்கியதாக பொய்யான தகவலும் வெளியாகி அதனை அவரது மனைவி சாக்சி மறுத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அஜிங்கியா ரஹானே மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக மகாராஷ்டிர முதலமைச்சர் நிவாரண நிதி அக்கவுண்டிற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்கம் மகாராஷ்டிராவில் அதிக அளவு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

rahane 1

இந்நிலையில் தற்போது சைலண்டாக தனது நிவாரண உதவி வழங்கியுள்ள ரஹானேவுக்கு இந்தியா முழுவதும் இருந்து ரசிகர்கள் வாழ்த்தினை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஹானே நன்கொடை அளித்த விடயத்தை பிரபல படுத்த விரும்பாமல், விஷயத்தை யாருக்கும் தெரியாமல் பப்ளிசிட்டி வேண்டாம் என்று சைலண்டாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement