சதத்தை தவறவிட்டாலும், பல சாதனைகளை குவித்துவிட்டு சென்ற ரஹானே – சாதனைகளின் விவரம் இதோ

Rahane-2
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது இரண்டாவது நாளாக இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இன்று இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து இருந்தது.

Rahane

- Advertisement -

அதனை தொடர்ந்து விளையாடிய அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும் அவருக்கு உறுதுணையாக ஆடிவந்த ரஹானே சதத்தை நெருங்கி வந்தார். இந்திய அணி அதுவரை 2 ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை குவித்துள்ளது. தேநீர் இடைவெளிக்கு பிறகு சில ஓவர்களில் ரஹானே அதமிழந்து வெளியேறினார்.

சிறப்பாக விளையாடிய ரஹானே எதிர்பாராத வகையில் 86 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இந்த போட்டியில் சதம் அடிக்கும் எளிமையான வாய்ப்பை ரஹானே இழந்தாலும் அவரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல முக்கிய சாதனைகளை படைத்துவிட்டே சென்றார் என்று கூறலாம்.

Rahane 1

அதன்படி இந்த போட்டியில் ரஹானே 25 ரன்களை அடித்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4000 ரன்களை அடித்தார். மேலும் 4000 ரன்களை அடித்த 16 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். அதுமட்டுமின்றி 104 இன்னிங்சில் 4000 ரன்களை குவித்த இந்திய வீரர்களான கங்குலி மற்றும் லக்ஷ்மண் சாதனையை அவர் சமன் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement