இவருக்கு எந்த பிரச்சனையும் இல்ல. நிச்சயமா அடுத்த போட்டியில் விளையாடவாறு – ரஹானே தகவல்

Rahane

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைப்பெற்று முடிந்தது. மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் ஸ்மித், புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 338 ரன்கள் எடுத்துள்ளனர்.இதில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் விளாசினார்.

ashwin 1

இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிஸ்சில் 312ரன்கள் குவித்து. அதன்பிறகு 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை குவித்து டிரா செய்தது. இறுதி நாள் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினர்.

அதிலும் குறிப்பாக ரிஷப் பண்ட் 97 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட்டுடன் இணைந்து புஜாராவும் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். இதையடுத்து இணைந்த அஸ்வின், விகாரி ஜோடி தேனீர் இடைவெளிக்கு பின் வெற்றி அடைய முடியாது என்றதால் விக்கெட்களை இழக்காமல் போட்டியை ட்ரா செய்தனர். இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 40 ஓவர்களுக்கு மேல் விளையாடி இருக்கின்றனர்.

Pant

இந்நிலையில் இந்த போட்டியின் போது சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பண்ட் 97 ரன்களை அதிரடியாக அடித்தாலும் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால் அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தன. இருப்பினும் பலமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது இன்னிங்சில் இதுபோன்று 97 ரன்கள் அடிப்பது என்பது சாதாரணமான விடயம் கிடையாது. அந்த அளவுக்கு அவர் காட்டிய அதிரடியை பல்வேறு முன்னாள் வீரர்களும் வியந்து பாராட்டியுள்ளனர். அவருக்கு தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் இடது முழங்கையில் பலமாக காயம் பட்டார்.

- Advertisement -

pant

எனவே அவர் 4வது போட்டியில் விளையாடுவாரா ? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த இந்திய அணியின் கேப்டன் ரகானே கூறுகையில் : ரிஷப் பண்ட் தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். மேலும் அவருக்கு முதல் இன்னிங்ஸில் ஏற்பட்ட காயம் பெரிய அளவில் இல்லை. தற்போதைய நிலையில் அவர் முழு பலத்துடன் இருப்பதால் நிச்சயம் 4வது போட்டியில் விளையாடுவார். அதேபோன்று இந்த போட்டியை போன்றே அடுத்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என ரஹானே உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.