இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் முடிவடைந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் மட்டும் எடுத்து படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவின் இந்த தோல்வி குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் அவர் இந்தியா திரும்பவுள்ளதால், மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இந்தியா திரும்பும் முன் அணியில் ஒரு ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டுள்ளார். இதனால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கு துணை கேப்டன் ரகானே தலைமையில் இந்திய அணி செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது .
விராட் கோலியின் ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து தற்போது அஜின்கியா ரகானேவும் ஒரு திட்டத்தை தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தனது அதிரடி பவுலிங்கை வெளிப்படுத்திய நடராஜனை டெஸ்ட் தொடருகாக தயாராக இருக்கும்படி கூறியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மீதமுள்ள போட்டிகளில் நவதீப் சைனி அல்லது முகமது சிராஜ் இருவருள் ஒருவர் இந்திய அணியில் இடம்பெறுவார்கள்.
இருப்பினும் நடராஜனின் டெஸ்ட் வலைப்பயிற்சி ஆட்டத்தை கண்ட விராட் கோலி மற்றும் ரகானே மிரண்டுள்ளனர். இதனால் ரகானே நடராஜனை எப்போது வேண்டுமென்றாலும் தயாராக இருக்குமாறு கூறியுள்ளார். இருப்பினும் முகமது சிராஜ் மற்றும் சைனி இருப்பதால் நாகராஜன் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். ஆனால் இவர்கள் இருவரில் ஒருவரின் ஆட்டம் மோசமடைந்தாலும் நடராஜன் அணியில் இணைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.