இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் முடிவில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சினால் எந்த ஒரு இடத்திலும் ரன் குவிப்பில் முனைப்பு காட்டாத ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்குள் முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது.
இந்த இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி துவக்க வீரரான அகர்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் கில், ரகானே, ஜடேஜா போன்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குறிப்பாக இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 277 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது ரகானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி சிறப்பாக விளையாடியது. 40 ரன்களுடன் துவங்கிய ஜடேஜா அரைசதத்தை கடந்து 57 ரன்களில் அவுட்டானார். மேலும் 104 ரன்களுடன் இருந்த ரஹானே 112 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட சிறிய குழப்பத்தினால் சிறப்பாக விளையாடி வந்த ரஹானே ரன் அவுட் ஆனார்.
அந்த தவறினை நினைத்த ஜடேஜா உடனே ரஹானேவிடம் தலை குனிந்து தனது வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அதனை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்ட ரஹானே அவரை தட்டிக் கொடுத்து சிறப்பாக விளையாடும் படி கூறிவிட்டு வெளியேறினார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவரது இந்த செயலை பாராட்டி அதுமட்டுமின்றி கேப்டன் என்றால் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்பது போலும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#AUSvINDtest
Rahane be like “koi nhi jaddu hota hai” instead of being angry on him for the runout pic.twitter.com/HOUplZxhes— bhargavprdip (@bhargav_prdip) December 28, 2020
அதனை தொடர்ந்து தற்போது 2-வது இன்னிங்சை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் தேனீர் இடைவேளைக்கு பிறகு வரை 101 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 30 ரன்கள் இன்னும் பின்தங்கிய உள்ளதால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.