முதல் போட்டி முடிந்ததுமே நான் விராட் கோலியிடம் சென்று மன்னிப்பு கேட்டுட்டேன் – ரஹானே வெளிப்படை

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மைதானத்தில் 26ஆம் தேதி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

indvsaus

- Advertisement -

இந்நிலையில் இந்தப் போட்டிக்கு முன்பாக நேற்று பேட்டி அளித்த இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரகானே முதல் போட்டி குறித்து பேசுகையில் : கோலியை தான் ரன் அவுட் செய்ததால் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : அந்த நாள் ஆட்டத்திற்கு பிறகு நான் கோலியிடம் சென்று நடந்ததை தெரிவித்து வருத்தம் தெரிவித்தேன். அவர் பரவாயில்லை விடுங்கள் என்றார்.

எங்கள் இருவருக்குமே ஆட்டத்தின் இந்த சூழல் தெரியும், நன்றாக விளையாடிக் கொண்டிருந்தோம். இருப்பினும் இதுபோன்ற தருணங்களை கிரிக்கெட் விளையாட்டில் தவிர்க்க முடியாது. இது ஒரு மிகவும் கடினமான தருணம் என்று ரஹானே தெரிவித்தார். முதல் போட்டியின் போது இந்திய அணி தோல்வியை தழுவ முக்கிய காரணமாக கோலியின் ரன் அவுட்டும் பார்க்கப்படுகிறது.

Rahane

ஏனெனில் முதல் இன்னிங்சில் நல்ல முன்னிலையில் இருந்த இந்திய அணி திடீரென தடுமாற அவரது விக்கெட் விழுந்ததும் ஒரு காரணம் என்று கூறலாம். ஏனெனில் 74 ரன்களுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கோலி சதம் அடித்து பெரிய ரன் குவிப்பை வெளிப்படுத்துவார் என்று நினைத்த நிலையில் அவர் ஆட்டமிழந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Kohli 1

அதுமட்டுமின்றி தற்போது முதல் போட்டிக்குப் பின்னர் தனது மனைவி பிரசவத்திற்காக கோலி நாடு திரும்பி உள்ளதால் மீதமுள்ள மூன்று போட்டிகளை ரஹானே முன்னின்று கேப்டனாக நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement