- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எந்த இருவரை வேண்டாம் என்று இந்திய அணி நினைத்ததோ அவர்களால் கிடைக்க இருக்கும் மே.இ தொடர் வெற்றி – விவரம் இதோ

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விகாரி 111 ரன்களை எடுத்தார். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 117 ரன்களில் ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 168 ரன்கள் குவித்தது. ரஹானே அதிகபட்சமாக 74 ரன்களை குவித்தார்.

- Advertisement -

அதன்பின்னர் 468 குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் 423 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்த தொடரின் ஆரம்பத்தில் ரஹானே மற்றும் விகாரி ஆகியோர் அணிக்கு தேர்வாகி இருந்தாலும் இருவரில் ஒருவருக்கு பதிலாக ரோகித் அணியில் இடம் பெற வேண்டும் என்று அணியும், ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஏனெனில் ரோகித்சர்மா உலக கோப்பை தொடரில் சிறப்பான பார்மில் இருந்ததால். எனவே அவர் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் கோலி அவர்கள் இருவரையும் தொடர்ந்து அணியில் ஆட வைத்தார். அதற்கு ஏற்றார்போல் ரகானே முதல் டெஸ்டில் சதத்தையும், விஹாரி தற்போது இரண்டாவது டெஸ்டில் சதம் மற்றும் அரை சதம் அடித்து இந்திய அணியின் இந்த தொடரின் வெற்றிக்கு உதவியுள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by