ஆஸ்திரேலிய தொடரின் 4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய 2 இந்திய வீரர்கள் இவர்கள் தான் – விவரம் இதோ

Rahane-3

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் என மூன்று விதமான பார்மட்களிலும் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும் டி20 தொடரில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தது. இதன்பின் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் மட்டும் பெற்று படுமோசமான தோல்வியை பெற்றது.
இந்த முதல் போட்டியில் நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டு மீதமுள்ள போட்டிகளில் விளையாடவில்லை. இந்திய கேப்டன் விராட் கோலியும் முதல் போட்டியுடன் நாடு திரும்பினார்.

sundar 3

இரண்டு முக்கிய அணியில் வெளியேறினாலும் மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த இரண்டாவது டெஸ்டிலும் யுமேஷ் யாதவ் காயமடைந்து விலகினார். இது இந்திய அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பல்வேறு காயங்களுடன் போராடி போட்டியை ட்ரா செய்தது.

முதல் டெஸ்டில் பங்குபெறாத ரோகித் சர்மா மூன்றாவது டெஸ்டில் விளையாடினார். ஆனால் இந்த போட்டியில் ரிஷப் பண்ட், ஜடேஜா, விஹாரி மற்றும் அஸ்வின் ஆகிய நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் பண்ட் தவிற மற்ற வீரர்கள் அனைவரும் போட்டியை விட்டு விலகியுள்ளார்கள்.
இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றி பெற்று சமநிலையில் இருக்கிறது.

rohith

மூன்றாவது போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு பதிலாக தமிழக வீரர்களான டி நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் பிரிஸ்பேனில் நடைபெறும் கடைசி போட்டியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடம் இணைந்து ஷர்துல் தாகூரும் இடம்பெற்றுள்ளார். கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டை இழந்து 369 ரன்கள் குவித்தனர்.

- Advertisement -

Pujara

இதில் தமிழக வீரர்களான டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட்களை வீழத்தி சிறப்பாக விளையாடியுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இந்த 4 டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவர்கள் மட்டும் அனைத்து போட்டிகளிலும் இடம்பெற்று விளையாடி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.