இந்தியாவை தோற்கடிக்க சிஎஸ்கே தான் காரணம்.. அது ரொம்ப ஹெல்ப் பண்ணுச்சு.. ஆட்டநாயகன் ரவீந்திரா பேட்டி

Rachin Ravindra
- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் இந்தியாவில் 36 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் போட்டியில் வென்ற நியூசிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 46க்கு ஆல் அவுட்டானது.

அதனால் சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்து இந்தியா மோசமான சாதனை படைத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்களும் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளும் எடுத்தனர். பின்னர் பேட்டிங் செய்த நியூசிலாந்து டேவோன் கான்வே 91, ரச்சின் ரவீந்திரா 134 ரன்களும் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

நியூஸிலாந்து வெற்றி:

இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இந்தியா முடிந்தளவுக்கு போராடியும் 462 எடுத்தது. அதிகபட்சமாக சர்பராஸ் கான் 150, ரிஷப் பண்ட் 99 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக வில்லியம் ஓரோர்கே, மாட் ஹென்றி தலா 3 விக்கட்டுகள் எடுத்தனர்.

இறுதியில் 107 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ரவீந்திரா 38*, வில் எங் 38* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர். இந்தியாவுக்கு பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு 134, 38* ரன்கள் முக்கிய பங்காற்றிய ரச்சின் ரவீந்தரா ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

சிஎஸ்கே உதவி:

இந்நிலையில் இத்தொடரில் அசத்துவதற்காக ஐபிஎல் தொடரில் தாம் விளையாடும் சிஎஸ்கே அணியின் மைதானமான சென்னைக்கு சென்று பயிற்சிகளை எடுத்ததாக ரவீந்திர கூறியுள்ளார். அதுவே இந்தியாவை இப்போட்டியில் தோற்கடிக்க உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பெங்களூரு நல்ல நகரம். இங்கே பேட்டிங் செய்வதற்கு பிட்ச் நன்றாக இருந்தது. ஃபார்ம் மற்றும் ஃபுட்ஒர்க் ஆகிய இரண்டிலும் தயாரானேன். என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு எனக்கு இருக்கும் வரை அனைத்தும் சிறப்பாக செல்லும்”

இதையும் படிங்க: இப்படி நடக்கும்னு நான் சத்தியமா எதிர்பாக்கல.. தோல்விக்கு இதுதான் காரணம் – ரோஹித் சர்மா வருத்தம்

“இந்த தொடருக்காக தயாரானது உதவி செய்தது. அதற்காக நான் கருமண், செம்மண் போன்ற வித்தியாசமான பிட்ச்களில் வித்தியாசமான பவுலர்களுக்கு எதிராக பயிற்சி எடுக்க முயற்சித்தேன். சென்னையில் அந்த உதவிகள் கிடைத்ததற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். சென்னையில் தரமான நேரத்தை செலவிட்டேன். அதற்காக சிஎஸ்கே அனைத்து நன்றியுடையவனாக இருக்கிறேன். அது எனக்கு உதவியது. பெங்களூருவில் எங்களுடைய குடும்பத்தின் ஆதரவு கிடைத்தது நன்றாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement