அஸ்வின், ஜடேஜாவை சமாளிப்பது கஷ்டம்.. ஆனா இதை செஞ்சா இந்தியாவில் ஜெயிக்க முடியும்.. ரவீந்திரா நம்பிக்கை

Rachin Ravindra 2
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் துவங்குகிறது. சமீபத்தில் இலங்கையிடம் அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் நியூசிலாந்து மோசமான தோல்வியை சந்தித்தது.

எனவே அதிலிருந்து மீண்டெழுந்து இந்தியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் நியூசிலாந்து விளையாட உள்ளது. மறுபுறம் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் அசத்தி வரும் இந்தியா சமீபத்தில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கி 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றது. அதனால் இத்தொடரிலும் நியூசிலாந்தை வீழ்த்து இந்தியா வெல்லும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

அஸ்வின் – ஜடேஜா சவால்:

குறிப்பாக இந்தியாவில் அஸ்வின் – ஜடேஜா ஆகிய தரமான ஸ்பின்னர்களைத் தாண்டி நியூசிலாந்து வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் அசத்தும் எக்ஸ்ட்ரா திறமையை கொண்டுள்ளதாக நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார். எனவே அவர்களை சமாளிப்பது கடினம் என்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

அதை விட இந்தியாவில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதைப் பற்றி கவலைப்படாமல் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி நன்றாக விளையாடினால் இந்தியாவில் வெற்றி தங்களை தேடி வரும் என்று ரவீந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீண்ட காலமாக தொடர்ச்சியாக அசத்தும் பவுலர்கள் இந்தியாவிடம் உள்ளனர்”

- Advertisement -

சவாலான இந்தியா:

“அஸ்வின் மற்றும் ஜடேஜா மிகவும் திறமையானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களால் பேட்டிங்கும் செய்ய முடியும் என்பது வெற்றியை கொஞ்சம் கடினமாக்குகிறது. எனவே இந்தியாவில் அவர்களை எதிர்த்துப் போராடுவது சவாலாக இருக்கும். இந்தியா தங்களது சொந்த மண்ணில் வைத்துள்ள சாதனை இங்கே அவர்களே வீழ்த்துவது எவ்வளவு கடினம் என்பதைக் காட்டுகிறது”

இதையும் படிங்க: இலங்கை மாதிரி கிடையாது.. அந்த 2 அனுபவங்களை வெச்சு இந்தியாவில் வெற்றி பெறுவோம்.. ரச்சின் நம்பிக்கை

“இந்தியா எவ்வளவு தரமான அணி என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் நியூசிலாந்து அணியான நாங்கள் எதிரணியை பற்றி அதிகம் பார்க்க முயற்சிக்க மாட்டோம். நாங்கள் எங்களுடைய விளையாட்டை தொடர்ச்சியாக நன்றாக விளையாடினால் வெற்றி முடிவுகள் எங்களைத் தேடி வரும் என்று நம்புகிறேன். இலங்கையில் நாங்கள் தோல்வியை சந்தித்தாலும் சில நல்ல விஷயங்களை செய்தோம். நிறைய கற்றுக் கொண்டோம். அந்தப் பாடங்களை இந்தியாவில் நாங்கள் வெற்றிக்காக பயன்படுத்துவோம்” என்று கூறினார்.

Advertisement