இன்றைய போட்டியில் இதனை கவனித்தீர்களா ? நாளைக்கு கோலி ரஹானே விளையாடறது கஷ்டம் தான் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் துவங்கியது.

agarwal 3

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளில் இழந்து 273 ரன்களை குவித்துள்ளது. அகர்வால் 108 ரன்களில் ஆட்டமிழக்க, கோலி தற்போது 63 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இன்றைய போட்டியில் நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருந்தால் அது நன்றாக புரிந்து இருக்கும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் தென்னாபிரிக்கா சுழல் பந்துவீச்சாளர்கள் ஒன்றுமே செய்யமுடியவில்லை. வேகப்பந்து வீச்சாளரான ரபாடா இந்திய அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

rabada

ரோகித்சர்மா, அகர்வால் மற்றும் புஜாரா என அனைவரும் இவரது பந்தில் தான் கேட்ச் கொடுத்து வெளியேறினார்கள். நாளை போட்டியின் துவக்கத்தில் இன்னும் வேகப்பந்துவீச்சு மைதானத்தில் எடுபடும் என்பதால் நாளை காலையில் இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள கோலி மற்றும் ரஹானே ஆகியோருக்கு நெருக்கடியை கொடுக்கும் என்பது மட்டும் உறுதி.

Advertisement