சூப்பர் ஓவரை ரபாடா வீச இதுதான் காரணம் – மனம் திறந்த ஷ்ரேயாஸ் ஐயர்

iyar
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 10 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச டெல்லி முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை அடித்தது. கொல்கத்தா அணி சார்பாக 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார்.

Kolkata

- Advertisement -

பிறகு ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் சரியாக 185 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பில் துவக்க வீரர் பிரிதிவி ஷா சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 99 ரன்களை குவித்தார். இதனால் போட்டி டை ஆனது. பிறகு வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி 10 ரன்களை குவித்தது. பிறகு கொல்கத்தா அணியால் 7 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

போட்டிக்கு பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஐயர் கூறியதாவது : ஆட்டம் டையில் முடிந்தபோது சற்று வருந்தினேன். ஆனால், சூப்பர் ஓவரில் அணி வெற்றிபெறும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. சூப்பர் ஓவரை யாரை வீச வைக்கலாம் என்று நினைத்தபோது ரபாடா என்னிடம் வந்து சூப்பர் ஓவரை நான் வீசுகிறேன். என்னால் 6 பந்தினையும் யார்கராக வீசமுடியும் என்று கூறினார்.

மேலும், அவர் கூறியது போலவே 6 பந்துகளையும் சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றியினை பெற்றுத்தந்தார். அவரின் திறமை பற்றி நம் அனைவர்க்கும் தெரியும். இருப்பினும், நேற்றைய போட்டி அவரின் திறமையினை வெளிக்காட்டும்படி இருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement