2019 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் ஓவர். 6 பந்துகளையும் யார்கராக வீசிய ராபாட – வீடியோ

Andre
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்கு இடையே நடைபெற்ற போட்டியானது டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் வரை சென்று டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணிக்கு 11 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா சிறப்பாக பந்துவீசி டெல்லி அணி வெற்றிபெற உதவினார். அந்த ஓவரின் 6 பந்துகளையும் யார்கராக வீசியது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 10 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச டெல்லி முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை அடித்தது. கொல்கத்தா அணி சார்பாக 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார்.

பிறகு ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் சரியாக 185 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பில் துவக்க வீரர் பிரிதிவி ஷா சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 99 ரன்களை குவித்தார். இதனால் போட்டி டை ஆனது. பிறகு வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி 10 ரன்களை குவித்தது. பிறகு கொல்கத்தா அணியால் 7 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

Advertisement