- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2013லயே தோனி கீப்பிங் பிராக்டீஸை விட்டும்.. மின்னல் வேகத்தில் ஸ்டம்ப்பிங் செய்ய இதான் காரணம்.. ஸ்ரீதர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவரது தலைமையில் இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறி சாதனைப் படைத்தது. அத்துடன் விக்கெட் கீப்பராகவும் ஃபினிஷராகவும் அசத்திய அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

முன்னதாக பன்முகத்தன்மை கொண்ட தோனி மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதில் வல்லவராக அறியப்படுகிறார். ஸ்பின்னர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் காலை கொஞ்சம் தூக்கினாலும் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து தெறிக்க விடுவார். அதனாலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்த கீப்பராக தோனி உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2013லயே விட்ட தோனி:

அப்படிப்பட்ட தோனி 2013 – 2014 காலகட்டங்களிலேயே விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை விட்டு விட்டதாக இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். ஏனெனில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் விளையாடிய தோனி பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனாலும் தம்முடைய ஆரம்பக் கால விக்கெட் கீப்பிங் பயிற்சிகளால் பெற்ற அனுபவத்தை வைத்து இப்போதும் தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதாக அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஸ்ரீதர் பேசியது பின்வருமாறு. “சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 8 அல்லது 9வது வருடத்திற்கு பின் தோனி விக்கெட் கீப்பிங் செய்வதற்காக பயிற்சிகளை எடுக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டுக்கு வராத முந்தைய காலங்களில், அதாவது 2005 – 2007 வருடங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய விக்கெட் கீப்பிங்கில் நிறைய வேலை செய்தார்”

- Advertisement -

மின்னல் வேகத்தில் தோனி:

“அவரிடம் நல்ல டெக்னிக் இருக்கிறது. சொல்லப்போனால் அவர் சொந்தமாக தனக்கென்று விக்கெட் கீப்பிங் டெக்னிக் வைத்துள்ளார். அது பாரம்பரியமிக்கது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடுவது பணிச்சுமையை உண்டாக்குகிறது என்பதை தோனி தமக்குத் தாமே ஒப்புக்கொண்டார்”.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 22இல் ரஞ்சியில் விளையாட முடிவெடுத்து.. திடீரென 24இல் ஓய்வை அறிவித்தது ஏன்? புஜாரா பேட்டி

“ஏனெனில் கடந்த பல வருடங்களாக அவர் ஸ்டம்ப்களுக்கு பின்னே நின்று பந்தை பிடித்து வேறு பக்கம் தூக்கிப் போடுகிறார். அதனாலேயே விக்கெட் கீப்பராக பயிற்சிகளைக் குறைத்துக் கொண்ட அவர் சாதூரியமாக தன்னுடைய பணிச்சுமையைக் குறைத்தார். இப்போதும் விக்கெட் கீப்பிங் செய்வதற்காக அவர் பெரிய பயிற்சிகளை எடுப்பதில்லை. போட்டிக்கு முன் சிறிய ரியாக்சன் பயிற்சிகளை மட்டுமே எடுப்பார். ஆனால் அதுவே அவரை கூர்மையாகவும் மின்னல் வேகத்திலும் செயல்பட வைக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -