
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வருகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பைக் கோட்டை விட்டது. அந்தத் தோல்விக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தம்முடைய ஒருநாள் கேரியரில் முதல் முறையாக அடுத்தடுத்த டக் அவுட்டானது முக்கிய காரணமானது.
இத்தொடரில் 7 மாதங்கள் கழித்து விராட் கோலி, ரோஹித் சர்மா இந்தியாவுக்காக விளையாடுவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல் போட்டியில் விராட் 0, ரோஹித் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் 2வது போட்டியில் ரோஹித் சர்மா 73 ரன்கள் அடித்து ஃபார்மை கண்டறிந்த நிலையில் விராட் கோலி டக் அவுட்டானார்.
ஏற்கனவே 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித்தை கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் விராட் கோலி அடுத்தடுத்து டக் அவுட்டானது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் 2வது போட்டியில் ரோஹித் அசத்தியதைப் போல 3வது போட்டியில் விராட் கோலி அசத்த வேண்டுமென்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இல்லையெனில் கேரியரை முடிக்கும் அளவுக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பேசியே விராட் கோலியை விமர்சிப்பார்கள் என்று அஸ்வின் கவலைத் தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி சிட்னியில் ரன்கள் அடிப்பார் என்று நான் உண்மையாக நம்புகிறேன். கடந்த செவ்வாய்க்கிழமை ரோஹித் சர்மாவுக்கு என்ன நடந்ததோ அது சிட்னியில் விராட் கோலிக்கு நடக்க வேண்டும்”
“ஏனெனில் நாம் ஏன் தோற்றோம்? என்று இந்தியாவில் பேச மாட்டார்கள். அதை விட்டுவிட்டு யாரால் நாம் தோற்றோம்? என்று அடிக்கடி பேசுவார்கள். எனவே மக்கள் விரலை நீட்டுவதற்கு முன் விராட் ரன்கள் அடிப்பார் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார். அத்துடன் முதல் போட்டியில் ஸ்டார்க் வீசிய அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் விராட் கோலி விக்கெட்டை இழந்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இதோட சர்பராஸ் கேரியர் முடியாது.. இதை செஞ்சு இந்தியாவுக்காக கம்பேக் கொடுப்பாரு.. தாக்கூர் ஆதரவு
2வது போட்டியில் சேவியர் ஃபார்லெட் வேகத்தில் பிட்ச்சாகி உள்ளே வந்த பந்தில் விராட் கோலி அவுட்டானார். எனவே 3வது போட்டியில் அவருக்கு மனதளவில் மிகப்பெரிய சவால் இருக்கும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து 3வது போட்டி அக்டோபர் 25ஆம் தேதி சிட்னி நகரில் இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.