- Advertisement -
ஆசிய கோப்பை

கம்பீரால் மட்டுமே நம்பர் ஒன் பவுலரை பெஞ்சில் விட முடியும்.. 2026 டி20 உ.கோ ஜெய்க்க அவர் வேணும்.. அஸ்வின் அதிருப்தி

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை தோற்கடித்தது. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. முன்னதாக அமீரகத்துக்கு எதிரானப் போட்டியில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் (99) எடுத்த பவுலராக சாதனை படைத்துள்ள அர்ஷ்தீப் சிங் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

இத்தனைக்கும் 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய பங்காற்றினார். இருப்பினும் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளரை மட்டுமே தேர்ந்தெடுத்த கௌதம் கம்பீர் அவரை பெஞ்சில் அமர வைத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் அர்ஷ்தீப் போன்ற நம்பர் ஒன் பவுலரை கௌதம் கம்பீரால் மட்டுமே பெஞ்சில் அமர வைக்க முடியும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

நம்பர் ஒன் அர்ஷ்தீப்:

2026 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டுமெனில் அர்ஷ்தீப் விளையாடுவது அவசியம் என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அர்ஷ்தீப் விளையாடாதது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் கௌதம் கம்பீர் சகாப்தத்தில் இதெல்லாம் புதிதல்ல. சாம்பியன்ஸ் டிராபியில் பிட்ச் காய்ந்திருந்த போது அவர்கள் குறைவான வேகப்பந்து விட்டாளர்களுடன் சென்றார்கள்”

“அவர்கள் அங்கே அர்ஷ்தீப்பை விளையாட வைத்திருக்கலாம். இப்போதைய அணியை நாம் 2026 டி20 உலகக் கோப்பையில் பார்க்க முடியும். கம்பீர் – சூரியகுமார் ஆகியோர் 2 விஷயங்களை நோக்கி நகர்கிறார்கள். ஒன்று பேட்டிங் வரிசையில் ஆழம். அதற்காக அமீரகம் போன்ற அணிக்கு எதிராக உங்களுக்கு சிவம் துபே போன்ற எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன், 6வது பவுலர் தேவையா? நான் அர்ஷ்தீப் இடத்தில் இருந்தால் ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பேன்”

- Advertisement -

அஸ்வின் விமர்சனம்:

“ஏனெனில் சிறப்பாக விளையாடியுள்ள அவர் நம்பர் ஒன் பவுலராக இருக்கிறார். டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய அவர் ஏமாற்றத்துடன் இருப்பார். ஆனால் இதுவே அடுத்த டி20 உலகக் கோப்பை அணியாக இருக்கலாம். கொல்கத்தாவின் ஆலோசராக இருந்த போது கூட கம்பீர் ஸ்பின்னர்களை அதிகமாக விரும்பினார். ஒருவேளை இந்தியா ஸ்பின்னர்களை அதிகமாக பயன்படுத்தினால் அது ஆபத்தான விஷயமாகும்”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனால் முடியாதுன்னு நினைக்காதீங்க.. ரோல் மாற வாய்ப்பிருக்கு.. பேட்டிங் கோச் கோட்டக் பேட்டி

“நம்முடைய பேட்டிங் வரிசையைப் பார்க்கும் போது ஸ்பின்னர்கள் அதிகமாக இருக்கக்கூடாது. எனவே இந்தியாவுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வேகபந்து வீச்சாளர் தேவை என்று நான் நினைக்கிறேன். அதற்காக குல்தீப் – வருணை நீக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு எக்ஸ்ட்ரா வேகப்பந்து வீச்சாளருக்காக நீங்கள் மற்றொருவரை தியாகம் செய்ய வேண்டும். காரணம் பவுலர்கள் தான் கோப்பைகளை வென்று கொடுப்பார்கள்” என்று கூறினார்.

- Advertisement -