இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. அதனால் முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பந்து வீச்சில் மிடில் ஓவர்களில் இந்திய பவுலர்கள் விக்கெட்டை எடுக்கத் தடுமாறியது முக்கிய காரணமானது.
அதே போல பேட்டிங் துறையிலும் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோரைத் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் அசத்தாதது தோல்விக்கு வித்திட்டது. இந்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா போதுமான அளவுக்கு போராடவில்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். மறுபுறம் நியூசிலாந்து அணி முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் களமிறங்கி இந்தியாவை சாய்த்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
போராடாத இந்தியா:
அதே போல இந்தியா தங்களது பி அல்லது சி அணியை விளையாட வைத்திருந்தால் கூட வெற்றி பெற்றிருக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார். ஆனால் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய முதன்மையான இந்திய அணி போராடாமலேயே தோற்றது தமக்கு வேதனையளிப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அடுத்ததாக டி20 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளதால் இந்தத் தோல்வி மறந்து போகும். அங்கே சூழல் இருந்தால் விஷயங்கள் அதற்குத் தகுந்தார் போல் செல்லும் என்பது நமக்குத் தெரியும். ஒருவேளை டி20 உலகக்கோப்பை நன்றாக செல்லாவிட்டால் ஐபிஎல் தொடரில் நமது வீரர்கள் நன்றாக விளையாடாவிட்டால் நம்முடைய வீரர்கள் மேலே அழுத்தம் உண்டாகும்”
அஸ்வின் விமர்சனம்:
“ஆனால் அனைத்தும் நன்றாக செல்லும் பட்சத்தில் இந்தத் தொடரில் சந்தித்த தோல்வி மறக்கப்படும். என்னுடைய புத்தகத்தில் இத்தொடரில் 5 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றதாக கருதுகிறேன். ஏனெனில் 2 போட்டியில் வென்ற அவர்கள் மற்றொரு போட்டியில் இந்தியாவுக்கு நிறைய அச்சுறுத்தலைக் கொடுத்தார்கள். உண்மையில் அது ஒய்ட்வாஷ் வெற்றிக்கு நிகரானதாகும்”
இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல்: 6க்கு 6 வெற்றி.. புதிய வரலாற்று சாதனை படைத்த ஆர்சிபி.. பிளே ஆஃப்க்கு தகுதி
“இந்தியா தங்களது பி அல்லது சி அணியை விளையாட வைத்திருந்தால் கூட தோற்கடித்திருக்க முடியும் என்று நான் கருதுகிறேன். இது அணியின் தரத்தில் எதுவும் செய்யப்போவதில்லை என்பது எனக்கு கவலையளிக்கின்றது. வெளிப்புறத்திலிருந்து பார்க்கும் போது இந்திய அணியிடமிருந்து பதிலடி போராட்டம் தட்டையாக இருந்ததாகத் தெரிகிறது. அங்கே பதிலடி போராட்டம் இல்லை என்பது எனக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது. நாம் நியூசிலாந்தை அழுத்தத்திற்கு உள்ளாக்கவில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் நாம் அவர்களிடம் மிகவும் மென்மையான கிரிக்கெட்டை விளையாடினோம்” என்று கூறினார்.



