- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி ஒன்டே என்ஜின்.. ஆஸியில் விமர்சித்தவங்களுக்கு அது தெரியாது.. 2வது இன்னிங்ஸ் வரும்.. அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சர்வதேச போட்டியில் 27000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள பெரிய அனுபவத்தைக் கொண்டவர். இருப்பினும் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அவர் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தன்னுடைய விக்கெட்டை அவர் தொடர்ந்து பரிசளித்தது இந்திய ரசிகர்களையே ஏமாற்றமடைய வைத்தது.

அதனால் விராட் கோலி பேசாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறலாம் என்று ஒரு தரப்பு இந்திய ரசிகர்கள் விமர்சித்தனர். அந்த சூழ்நிலையில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதத்தை அடித்த விராட் கோலி இந்தியாவை வெற்றி பெற வைத்தார். துபாயில் 242 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு நங்கூரமாக விளையாடிய அவர் தனது 82வது சதத்தை அடித்தார்.

- Advertisement -

கிங் எப்போதும் கிங்:

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் விராட் கோலியை விமர்சித்தவர்கள் கிரிக்கெட்டைப் பற்றிய அடிப்படை தெரியாதவர்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இங்கிருந்து விராட் கோலி 2வது இன்னிங்ஸை துவங்கி இன்னும் சில வருடங்கள் சிறப்பாக விளையாடக்கூடும் என்றும் அஸ்வின் கணித்துள்ளார். இது பற்றி அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலியின் தரத்தில் நான் எப்போதும் சந்தேகத்தைக் கொண்டிருந்ததில்லை. நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்ததற்காக மக்கள் அவரை விமர்சித்தார்கள். ஆனால் சிவப்பு நிற பந்தில் பிட்ச்சில் புற்கள் இருந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அப்படி அவுட்டானார். ஆனால் அதற்கு நிறைய பேச்சுக்கள் காணப்பட்டது”

- Advertisement -

ஒன்டே என்ஜின்:

“பொதுவாக ஒருவர் ஸ்லிப் பகுதியில் அவுட்டாகலாம். கிளீன் போல்ட்டாகலாம். எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாகலாம். அது போல அவர் ஸ்லிப் பகுதியில் அவுட்டானதில் என்ன இருக்கிறது? விராட் கோலியின் கிளாஸ் எங்கேயும் செல்லவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் தான் விராட் கோலியின் என்ஜின் அறை இருக்கிறது என்று எப்போதும் சொல்வேன்”

இதையும் படிங்க: உங்க திட்டம் 30 வருஷமா இருக்கனும். அபிஷேக்கை நேராக பாராட்டிய ஜாம்பவான் வாசிம் அக்ரம்.. எளிய ஆலோசனை

“ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும் என்பதால் இது அவருடைய இரண்டாவது இன்னிங்ஸாக இருக்கலாம். அவரிடமிருந்து என்ன ஒரு அற்புதமான இன்னிங்ஸ். ஒருநாள் கிரிக்கெட்டில் 51வது சதத்தை அடித்துள்ள அவர் 14000 ரன்களை முன்பு அடித்த பேட்ஸ்மேனை விட 60 – 70 போட்டிகளில் குறைவாக எடுத்துள்ளார். இதற்கு மேல் நான் என்ன சொல்ல வேண்டும்? அவர் அற்புதமான பிளேயர்” என்று கூறினார்

- Advertisement -