2009இல் தெ.ஆ ஃபைனல் போகாத கதை தெரியுமா? நியூஸிலாந்து வலியை கொடுக்க வாய்ப்பிருக்கு.. அஸ்வின் பதிலடி

R Ashwin
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறும் இந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் இந்தியா தங்களுடையப் போட்டிகளை துபாயில் விளையாடுவதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2008 முதலே எல்லைப் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா முற்றிலும் நிறுத்தியுள்ளது. அந்த வரிசையில் இத்தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது என இந்தியா அறிவித்தது. அதனால் இந்தியா அவர்களது போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது. அப்போது யாருமே அது பற்றி விமர்சிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று செமி ஃபைனல் சென்றதும் இந்தியாவுக்கு துபாயில் ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

- Advertisement -

அஸ்வின் பதிலடி:

குறிப்பாக ஒரே ஹோட்டலில் தங்கி ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்டன், டேவிட் லாய்ட் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் அவர்களுக்கு 2009 சாம்பியன்ஸ் டிராபியை வைத்து ரவிச்சந்திரன் அஸ்வின் நெத்தியடி பதிலைக் கொடுத்துள்ளார். மேலும் செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த விதத்தை வைத்து ஃபைனலில் இந்தியாவை நியூசிலாந்து அணி வீழ்த்தலாம் என்றும் அவர் கவலையும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “இந்திய கேப்டன், பயிற்சியாளர்களிடம் துபாயில் நிலவும் சாதகமான சூழ்நிலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது எனக்கு சிரிப்பை தான் கொடுத்தது. 2009 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் தென்னாப்பிரிக்கா தங்களது அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடியது. ஆனால் அவர்கள் ஃபைனலுக்கு தகுதி பெறவில்லை”

- Advertisement -

இந்தியா – நியூஸிலாந்து:

“ஃபைனலுக்கு தகுதிப் பெறவில்லை என்பது தென்னாப்பிரிக்காவின் தவறல்ல. அதே போல இந்தியா தற்போது கிளாஸ் நிறைந்த கிரிக்கெட்டை விளையாடி ஃபைனலுக்கு சென்றுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கடைசியாக லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் தான் இந்தியா துபாயில் விளையாடியது. அதன் பின் அங்கே தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் விளையாடின”

இதையும் படிங்க: 1983 – 2024 ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு கண்டமா? பயமுறுத்தும் வரலாற்று புள்ளிவிவரம்.. ரசிகர்கள் இரட்டை கவலை

“ஆனாலும் அது போன்ற விமர்சனங்கள் இந்தியாவுக்கு மட்டுமே வருகிறது. எங்கள் வீரர்கள் மீது சேற்றை வாரி இரைக்கும் கதையை விடாதீர்கள். தற்போது எனக்குக் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து வென்ற விதத்தை வைத்து அவர்கள் மீண்டும் நம்மை காயப்படுத்தலாம் என்ற உணர்வு எனக்குத் தோன்றுகிறது” எனக் கூறினார்.

Advertisement