2 ஆல் ரவுண்டர்ஸ் பத்தலயா? அவரை பெஞ்சில் விட்டுட்டு இந்தியா ஜெய்க்க முடியாது.. கம்பீரை சாடிய அஸ்வின்

R Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மழையால் 26 ஓவர்களாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா136/9 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமானது. முன்னதாக அப்போட்டியில் இந்திய அணிக்காக ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பைப் பெற்றார்.

ஏற்கனவே அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஸ்பின் ஆல் ரவுண்டர்களாக விளையாடியதால் முதன்மை ஸ்பின்னரான குல்தீப் யாதவ் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்துள்ள அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பது அரிதாகி விட்டது.

- Advertisement -

ஆல் ரவுண்டர்கள் பத்தலையா:

சமீபத்திய ஆசியக் கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களில் ஆட்டநாயகன் விருது வென்றும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்நிலையில் பேட்டிங் துறையில் கொண்டுள்ள மோகத்தால் கௌதம் கம்பீர் இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னருக்கு வாய்ப்பளிப்பதில்லை ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 2 ஆல் ரவுண்டர்கள் இருக்கும் போது முதன்மை ஸ்பின்னரான குல்தீப் யாதவ் விளையாடுவது அவசியம் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நிதிஷ் ரெட்டியுடன் 2 ஸ்பின்னர்கள் எதற்காக விளையாடுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் அவர்கள் பேட்டிங் ஆழத்தை விரும்புகிறார்கள். அக்சர், சுந்தர் ஆகியோர் பேட்டிங் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் கொஞ்சம் பந்து வீச்சிலும் கவனம் செலுத்துங்கள்”

- Advertisement -

அஸ்வின் சாடல்:

“பெர்த் போன்ற பெரிய மைதானத்தில் விளையாடும் வாய்ப்பைப் பெறாவிட்டால் பின்னர் குல்தீப் யாதவ் எங்கு தான் விளையாடுவார்? அம்மைதானத்தில் அவருக்கு சாதகமாக ஓவர்ஸ்பின், பவுன்ஸ் ஆகியவை இருந்தது. பேட்டிங்கை ஆழப்படுத்த விரும்பினால் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்களை விளையாட வைப்பதால் நீங்கள் பேட்டிங் துறையை பாதுகாக்குறீர்கள்”

இதையும் படிங்க: ஒன்டே மாஸ்டர் கோலிக்கு அது வெறும் வார்த்தை மட்டுமே.. இந்தியாவுக்காக ரன்ஸ் அடிப்பாரு.. அர்ஷ்தீப் பேட்டி

“ஆனால் வெற்றிக்கு நீங்கள் உங்களது சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுடைய பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக மட்டும் வீரர்களை தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களுக்கு எத்தனை ஆல் ரவுண்டர்கள் தேவை? நித்திஸ் ரெட்டி அணிக்குள் வந்த பின்பும் உங்களுடைய சிறந்த பவுலரை விளையாட வைக்க முடியவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காவிட்டால் குல்தீப் யாதவ் தன்னுடைய திறமையை சந்தேகப்படத் துவங்குவார். அது அவரை மனதளவில் பாதிக்கும்” என்று கூறினார்.

Advertisement