மறுபடியும் இந்தியா தோத்தா.. ரிட்டையராகி போய்டலாம்னு 2012லயே சத்தியம் பண்ணேன்.. அஸ்வின் பேட்டி

R Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோற்றது. ஆனால் அப்போதிலிருந்து எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா தொடர்ந்து 12 வருடங்கள் ஒரு தொடரில் கூட தோற்கவில்லை. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக வருடங்கள் சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காத அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்து வந்தது.

அந்த சாதனை கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோற்ற போது முடிவுக்கு வந்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோற்று மோசமான சாதனை படைத்தது. அந்த தோல்விக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர்கள் காரணமானதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு கருதியது.

- Advertisement -

2012இல் செய்த சத்தியம்:

அதனால் அடுத்ததாக நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரில் அணி நிர்வாகம் அஸ்வினுக்கு வாய்ப்பை கொடுக்காமல் பெஞ்சில் அமர வைத்தது. அப்படி வெளிநாடுகளில் நீண்ட காலமாகவே தொடர்ந்து வாய்ப்பளிக்காததால் விரக்தியடைந்த அஸ்வின் பாதியிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்து நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன் விராட், ரோஹித் ஆகியோரும் ஓய்வு பெற்றனர்.

தற்போது அவர்கள் இல்லாமலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்தியா 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோற்றால் அதோடு ஓய்வு பெற வேண்டும் என்று 2012இல் முடிவெடுத்ததாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஓய்வுக்கான காரணம்:

அதன் அடிப்படையில் கடந்த நியூசிலாந்து தொடரில் தோற்றதாலேயே ஓய்வு பெற்றதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “2012இல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வியை சந்தித்த போது, இனிமேல் சொந்த மண்ணில் இன்னுமொரு தொடரில் நாம் தோல்வியை சந்தித்தால் அதோடு பெறலாம் என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன்”

இதையும் படிங்க: இதை சொல்ல கூச்சப்படல.. ரசிகர்களிடம் சாரி கேட்டுக்கிறேன்.. இந்தியா கம்பேக் கொடுக்கும்.. ரிஷப் பண்ட் பதிவு

“அந்த வகையில் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சந்தித்த தோல்வியை இன்று நான் வீட்டில் அமர்ந்திருக்க காரணமாகும். அது என்னை உடைத்தது. அதே போல தற்போதைய தென்னாப்பிரிக்க தொடரில் கிடைத்த நம்முடைய வீரர்களை உடைத்திருக்கும். அவர்கள் இதிலிருந்து வெளியே வந்து தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisement