க்ரஸ் இருக்கான்னு என் மனைவி கேட்டாங்க.. 2021இல் ஸ்மித்தை அவுட்டாக்க போட்ட திட்டம் பற்றி அஸ்வின் பேட்டி

R Ashwin Smith
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 765 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அவர் இந்தியாவின் பல வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் உலகின் பல டாப் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து அசத்தியுள்ளார்.

அந்த வரிசையில் 10000 ரன்கள் அடித்த தரமான ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அவர் மிகவும் சவாலை கொடுத்துள்ளார். 2013ஆம் ஆண்டு ஸ்மித்துக்கு எதிராக முதல் முறையாக பவுலிங் செய்த அஸ்வின் ஆரம்பக் காலங்களில் சுமாராகவே செயல்பட்டார். அதைப் பயன்படுத்தி முதல் 2 தொடர்களில் அஸ்வினை வெளுத்து வாங்கிய ஸ்மித் ஒருமுறை மட்டுமே விக்கெட்டை இழந்து 216 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

ஸ்மித்தை வீழ்த்த:

ஆனால் அதற்கடுத்த தொடர்களில் முன்னேற்றத்தை சந்தித்த அஸ்வின் அடுத்த 3 தொடர்களில் 218 ரன்கள் மட்டும் கொடுத்து ஸ்மித்தை 7 முறை அவுட்டாக்கினார். இந்நிலையில் 2020/21 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு வீட்டிலிருந்து செல்வதற்கு முன் ஸ்மித்தை அவுட்டாக்குவதற்காக அவருடைய பேட்டிங்கை பலமுறை பார்த்ததாக அஸ்வின் கூறியுள்ளார். அந்தளவுக்கு நெருக்கமாக பார்த்ததால் அவர் மீது கிரஸ் இருக்கிறதா? என்று தம்முடைய மனைவி பிரீத்தி கேட்டதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்மித் பேட்டிங் செய்வதை எனது வீட்டில் எத்தனை முறை பார்த்தேன் என்பது கூட எனக்கு நினைவில்லை. தொலைக்காட்சியில் அவருடைய கைகளை நான் மிகவும் பெரிதாக்கி பார்த்தேன். அப்போது என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்தார்கள். அவர்களை கூட நான் சில நாட்களாக சரியாக பார்க்கவில்லை”

- Advertisement -

அஸ்வின் திட்டம்:

“அவற்றை எனது பின்னே இருந்து பார்த்த என் மனைவி ஒருவேளை ஸ்மித் மீது உங்களுக்கு கிரஸ் இருக்கிறதா? என்று கேட்டார். அதற்காக அவர் கவலையும் பட்டார். ஸ்மித் மிகவும் வித்தியாசமான பேட்டிங் டெக்னிக் கொண்டவர். அதனால் அவருடைய கை சில நேரங்களில் கீழே வர வேண்டியது உள்ளது. அது கொஞ்சம் வேடிக்கையானது”

இதையும் படிங்க: அடப்போங்கய்யா 6இல் முடிந்த 12 வருட கம்பேக்.. ஏமாற்றிய விராட் கோலியால் ரசிகர்கள் செய்த செயல்

“அது அவருடைய டெக்னிக்கை கொஞ்சம் தொல்லை செய்வதை நான் கண்டறிந்தேன். அதை வைத்து குதிக்காமல் பந்தை லோடிங் செய்து வீசுவதில் கவனம் செலுத்தினேன். அந்தப் பந்தை அடிலெய்ட் மைதானத்தில் வீசினேன். அதைச் சரியாக கனிக்காமல் தாமதமாக அடிக்க முயற்சித்த ஸ்மித் எட்ஜ் கொடுத்தார்” எனக் கூறினார்.

Advertisement