வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு இந்தியா 144-6 என சரிந்த போது பேட்டிங்கில் 113 ரன்கள் குவித்து காப்பாற்றிய அஸ்வின் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினார்.
அந்த வகையில் தம்முடைய சொந்த ஊரில் நாட்டுக்காக அபாரமாக விளையாடிய அவர் ஆட்டநாயகன் விருது வென்றார். அதையும் சேர்த்து அஸ்வின் தம்முடைய கேரியரில் 10 ஆட்டநாயகன் மற்றும் 10 தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தனிநபர் விருதுகளை வென்ற வீரர் என்ற சச்சினின் (19) உடைத்துள்ள அஸ்வின் புதிய சாதனை (20) படைத்துள்ளார்.
விராட், ரோஹித் சர்மாவுக்கு சமமாக:
அது போக 38 வயதில் ஒரே போட்டியில் சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்த வீரராக அஸ்வின் உலக சாதனை படைத்தார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் எடுத்த 2வது வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே சாதனையையும் அஸ்வின் சமன் செய்தார். மேலும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கோர்ட்னி வால்ஷை முந்திய அஸ்வின் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு சமமாக அஸ்வினும் மகத்தான பங்காற்றி வருவதாக முன்னாள் வங்கதேச கேப்டன் தமீம் பாராட்டியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முழுமையான பேட்ஸ்மேனை போல் புத்திசாலித்தனமாக விளையாடினார்”
அஸ்வினின் மகத்தான பங்கு:
“நான் வேறு நாட்டிலிருந்து வந்தவன். இங்கே வரும் போது பெரும்பாலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பெயர்களையே நான் கேட்டேன். ஆனால் என்னுடைய கண்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் அவர்களுக்கு நிகராக உள்ளார். சதமடித்து 5 – 6 விக்கெட்டுகளை எடுக்கும் போது மட்டுமே அவர்களைப் பற்றி நாம் பேசுகிறோம்”
இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான வெற்றிக்கு பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் – ஏற்பட்டுள்ள மாற்றம்
“இந்திய அணிக்கு அவர்களுடைய பங்களிப்பு மகத்தானது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் பங்களிப்பு போலவே அஸ்வினின் பங்களிப்பு பெரியது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்குவது குறிப்பிடத்தக்கது.



