5 சதங்களை டாடியா மாத்துங்க.. இதை செய்யாம விக்கெட்ஸ் விழாது.. இந்திய வீரர்களுக்கு அஸ்வின் அட்வைஸ்

R Ashwin 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்குகிறது. முதல் போட்டியில் சந்தித்த தோல்வியிலிருந்து பாடத்தைக் கற்றுள்ள இந்தியா அந்தப் போட்டியில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

குறிப்பாக முதல் போட்டியில் 5 சதங்களை அடித்து இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது. ஆனால் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் 20 ரன்கள் கூட அடிக்கவில்லை. அதனால் பேட்டிங்கில் சிறப்பாக ஃபினிஷிங் செய்யத் தவறிய இந்தியா ஃபீல்டிங் துறையில் 7 கேட்ச்கள் தவற விட்டது. அது போக பவுலிங் துறையில் பும்ராம்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்தாததும் இந்தியாவின் தோல்விக்கு காரணமானது.

- Advertisement -

டாடி சதங்கள் அடிங்க:

இந்நிலையில் லோயர் ஆர்டர் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேன்களை நம்ப வேண்டாம் என்று இந்திய அணியை ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரித்துள்ளார். எனவே இங்கிலாந்தில் 5 சதங்களை அடிக்கும் அளவுக்கு திறமை கொண்ட இந்திய பேட்ஸ்மேன்கள் இனிமேல் டாடி சதங்கள் (150, 200+ ரன்கள்) அடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதே போல ஜஸ்ப்ரித் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் மெய்டன் ஓவர்களை வீசி குறைந்த ரன்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதை செய்யாமல் விக்கெட்டுகள் கிடைக்காது என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பேட்ஸ்மேன்கள் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். ரன்கள் அடிப்பதற்காக பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆம் அவர்கள் 5 சதங்கள் அடித்தார்கள். ஆனால் டாடி சதங்கள் எங்கே? லோயர் ஆர்டரில் நமக்கு எந்த பங்களிப்பும் கிடைக்காது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்”

- Advertisement -

அஸ்வின் கொடுத்த அட்வைஸ்:

“நம்முடைய வேகப்பந்து வீச்சாளர்களால் பேட்டிங் செய்ய முடியாது. அவர்கள் நிறைய ரன்கள் அடிக்க மாட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் மெய்டன் ஓவர்கள் அண்டர்ரேட்டட் என்று நினைக்கிறேன். ஜஸ்ப்ரித் பும்ரா ரன்களை வழங்கினால் பிரச்சனை இல்லை. அவர் அட்டாக் செய்து விக்கெட்டுகளை எடுப்பார். ஆனால் முகமது சிராஜ் அதிர்ஷ்டமின்மையால் விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்று சிலர் சொல்வதைப் பார்க்க முடிகிறது”

இதையும் படிங்க: 2022இல் அவர் டபுள் செஞ்சுரி அடிச்சப்போவே என்னோட இந்திய கேரியர் முடிஞ்சு போச்சுன்னு தெரியும்.. தவான் பேட்டி

“இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சிறப்பாக பவுலிங் செய்தார் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எக்கனாமி ரேட் அதிகமாக இருக்கிறது. அதிக எக்கனாமியில் பந்து வீசும் உங்களுடைய வழியில் விக்கெட்டுகள் விழும் என்று நம்புவதில் அர்த்தமில்லை” என கூறினார். இதற்கிடையே பர்மிங்கம் மைதானத்தில் இந்தியா ஒருமுறை கூட வென்றதில்லை என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement