இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட இருக்கும் புஜாரா. அவருக்கு பதிலாக விளையாட போவது இவர்தான்

Pujara-1
- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, இந்திய அணியில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழக்கூடும் என்று தெரிய வந்திருக்கிறது. அணியின் நலன் கருதி சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் இந்திய தேர்வுக் குழுவானது, அதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேட்டேஸ்வர் புஜாராவை அணியில் இருந்து நீக்கும் முடிவை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய இடத்திற்கு ஏற்கனவே இரண்டு வீரர்கள் தயாராக இருப்பதால், அந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

- Advertisement -

2010ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான புஜாரா, தனது சிறப்பான ஆட்டத்தால் பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும், இந்திய டெஸ்ட் அணியில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாகவும் தவிர்கக முடியாத வீரராகவும் இருந்து வந்தார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே அவர் ரன் குவிக்க தவறி வருகிறார். 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சேர்த்து இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவரின் சராசரி வெறும் 25 ஆக மட்டுமே இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைவான அளவில் ரன்களை சேர்ப்பதாலும் அவருடைய பேட்டிங் செயல்பாட்டின்மீது இந்திய ரசிகர்கள் கடுமையான விமர்ச்சனங்களை வைத்து வந்தனர். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், இரண்டு இன்னிங்சிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருக்கும் அவரை, எதிர் வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கும் முடிவை இந்திய தேர்வுக் குழு எடுக்கவிருப்பதாக தெரியகிறது.

அவருடைய இடத்தில் களமிறங்க இந்திய அணியின் மற்ற இரு பேட்ஸ்மேன்களான மயாங்க் அகர்வாலும், கே எல் ராகுலும் தயாராக இருக்கின்றனர். இதில் கே எல் ராகுல் ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் எந்த இடத்தில் களமிறக்கிவிட்டாலும் அணிக்கு தேவையான பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மயாங்க் அகர்வால் ஒரு மிகச் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடியுள்ளதால், அவரும் புஜாராவின் இடத்திற்கு கச்சிதமாக பொருந்திப் போவார்.

Agarwal

இங்கிலாந்து தொடருக்கு முன்னராக இந்திய அணிக்கு, கவுண்ட்டி அணிகளுடன் இரண்டு பயிற்சி போட்டிகளை ஏற்படுத்தி தருமாறு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. ஒருவேளை பயிற்சி போட்டிகளை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அமைத்து தந்தால், புஜாராவிற்கு பதிலாக கே எல் ராகுலும், மயாங்க் அகர்வாலும் அந்த பயிற்சி போட்டிகளிலேயே புஜாராவிற்கு பதிலாக விளையாடுவார்கள எனத் தெரிகிறது.

Advertisement