இவர் மட்டும் இன்னும் கொஞ்சம் நிதானமா நின்னு ஆடுனா. பெரிய அளவில் ரன்களை குவிப்பார் – புஜாரா நம்பிக்கை

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 578 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 218 ரன்களை குவித்து அசத்தினார். அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் குவித்துள்ளது.

Sibley 1

- Advertisement -

மேலும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இந்த போட்டியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதன்பின்னர் புஜாரா மற்றும் பண்ட் ஆகியோர் இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். புஜாரா 73 ரன்களையும், ரிஷப் பண்ட் 91 ரன்களையும் குவித்து ஆட்டம் இழந்தனர்.

இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 88 பந்துகளை சந்தித்த அவர் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரியுடன் 91 ரன்களை குவித்து மீண்டும் ஒருமுறை சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டு வெளியேறினார். இருப்பினும் அவர் விளையாடிய இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

pant 2

இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் இந்த ஆட்டம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா கூறுகையில் : ரிஷப் பண்ட் இன்னும் சற்று பொறுமையாக விளையாடி மற்ற வீரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியது அவசியம். அப்படி அவர் பொறுமையாக விளையாடி களத்தில் யார் இருந்தாலும் அவர்களுடன் ஒரு பெரிய பாட்னர்ஷிப்பை அமைத்தால் நிச்சயம் அவர் பெரிய ரன்களை குவிக்க வாய்ப்பு இருக்கிறது.

Pant

இன்னும் சற்று அதிக பந்துகளை எதிர்கொண்டு ஒரு பெரிய இன்னிங்சை அவர் விளையாடினால் நிச்சயம் அவரால் பெரிய ரன்களை குவிக்க முடியும். அதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை அவர் அதனைக் கற்றுக் கொண்டு சிறப்பாக விளையாடுவார் என நான் உறுதியாக நம்புவதாக புஜாரா மூன்றாம் நாள் ஆட்டநேர முடிந்ததும் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement