அவங்ககிட்ட வார்னர் ஸ்மித் இருந்தா என்ன.. நம்ம பக்கம் இவங்க 3 பேர் இருக்காங்க வெற்றி நமக்குத்தான் – புஜாரா சவால்

Pujara
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது மோத உள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு அவர்கள் நேராக துபாயில் இருந்து ஆஸ்திரேலியா சென்று அடைந்து விட்டனர். இந்நிலையில் இந்த தொடரின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது.

INDvsAUS

- Advertisement -

ஏனெனில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது 71 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது. அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஓராண்டு தடை இருந்ததால் அந்த தொடரில் விளையாட முடியவில்லை.

இந்நிலையில் அவர்கள் மீண்டும் இந்த தொடரில் அணிக்கு திரும்பி உள்ளதால் ஆஸ்திரேலிய அணி வலுவாக இருக்கும் என்று அனைவரும் கூறி வருகின்றனர். மேலும் முதல் டெஸ்ட் போட்டியுடன் விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்புவதால் இந்திய அணி பலவீனமாக இருக்கும் என்றும் சிலர் கருத்துக்களைக் கூறிவருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோரது வருகையால் இந்திய அணி சறுக்கலை சந்திக்கும் என பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கூறிவருகின்றனர்.

warnersmith

ஆனால் இந்திய அணி நிச்சயம் அவர்களை வீழ்த்தும் என இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன புஜாரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இணையவழி பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய புஜாரா கூறுகையில் : 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் இல்லை. ஆனால் தற்போது அவர்கள் அணிக்கு திரும்பி உள்ளதால் அது இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

ஆனால் எங்கள் அணி அவர்களிடம் எளிதாக தோற்காது ஏனெனில் நம் அணியில் திறமையான பவுலர்கள் உள்ளனர். எப்பேர்பட்ட பேட்ஸ்மேன்களையும் சமாளிக்கக்கூடிய, வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். குறிப்பாக பும்ரா, இசாந்த் சர்மா, முகமது சமி ஆகியோர் இருப்பதால் இந்த டெஸ்ட் தொடரை மீண்டும் இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது. நான் மீண்டும் சொல்கிறேன் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணிதான் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே நம் பந்துவீச்சாளர்கள் இடம் எந்த குறையும் கிடையாது. எனவே இந்த ஆண்டும் நம்மிடம் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது கூடுதல் பலம் தான். இதனால் இந்திய அணி எளிதில் கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது என புஜாரா சவால் விடுக்கும் பாணியில் பேசியுள்ளார். இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி அடிலைட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement