இவரது திறமை அசாத்தியமானது. மீண்டும் இவர் நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிப்பார் – புஜாரா உறுதி

Pujara
- Advertisement -

இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த தொடரை ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சௌராஷ்டிரா அணி வெற்றி பெற்று அசத்தியது. மேலும் சௌராஷ்டிரா அணியில் இருந்து பல வீரர்கள் ஐபிஎல் போட்டிகளின் மூலம் இந்திய அணியின் வாய்ப்புக்காக எதிர்பார்த்திருந்தனர்.

unadkat

- Advertisement -

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டியில் தள்ளிப் போய் இருப்பதால் வீரர்கள் சற்று கலக்கத்துடன் உள்ளனர். குறிப்பாக அந்த அணியின் கேப்டனான உனட்கட் இந்த சீசனில் 67 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அபாரமான பவுலின் திறமையை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.

அதிலும் குறிப்பாக ரஞ்சி தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியின் போது அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. மேலும் அவரது சிறப்பான பந்துவீச்சே அந்த அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது என்று கூறலாம்.

Unadkat 1

மேலும் அவர் இந்திய அணிக்காக திரும்பும் வாய்ப்பையும் தற்போது எதிர்பார்த்து வருகிறார். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் அவர் நிச்சயம் இந்திய அணிக்கு திரும்ப தகுதியானவர் என்று பலரும் கூறிவருகின்றனர். 28 வயதான உனட்கட் இந்திய அணிக்காக 2018 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் விளையாடினார். அதன்பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

உனட்கட் 2010 ஆம் ஆண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார் மேலும் 2013ம் ஆண்டு 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது சௌராஷ்டிரா அணியின் முன்னணி வீரரான புஜாரா உனட்கட் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Unadkat 2

அதில் அவர் கூறியதாவது : இந்த சீசன் முழுவதும் உனட்கட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது திறமை நிச்சயம் இந்திய அணியின் வாய்ப்பை மீண்டும் பெற்றுத்தரும். ஏற்கனவே இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக பந்துவீசிய அவர் அணியிலிருந்து நீக்கப்பட்ட துரதிஷ்டவசமானது ஆனாலும் தற்போது வரை சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய அணிக்கு நிச்சயம் தேர்வாக அனைத்து தகுதிகளும் உடையவர் என்று புஜாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement