ஆஸ்திரேலியாவில் நடந்த தவறு, இங்கு நடக்காது. முதல் பந்தில் இருந்தே பைட் பண்ணுவோம் – புஜாரா அதிரடி

Pujara-1

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 24ஆம் தேதி அன்று அஹமதாபாத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட மோதிரா ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறது.பகல்-இரவு ஆட்டமாக பிங்க் பாலில் இந்த போட்டி நடக்க இருக்கிறது. இது இந்தியாவுக்கு மூன்றாவது பிங்க பால் போட்டியாகும் அதில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வெற்றியும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியும் அடைந்தது.

தற்பொழுது உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆக மொட்டேரா ஸ்டேடியம் உள்ளது. அங்கு நடக்கும் முதற் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று அனைத்து இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி வீரர் புஜாரா ஆஸ்திரேலியாவில் நடந்தது போல் இங்கு அது நடக்காது என்று கூறியுள்ளார்.மேலும் அது குறித்து அவர்:

ஆஸ்திரேலியாவில் நாங்கள் விளையாடிய பகலிரவு சற்று மாறுபட்டது. அங்குள்ள பிட்ச் நன்றாக சீம் ஆகும் தன்மை உடையது.அப்படி இருந்த போதிலும் முதல் இன்னிங்சில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். பின்பு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தோல்வி பெற்றோம். ஆனால் இங்கு அப்படி கிடையாது. இங்குள்ள அனைத்து பிட்ச்களும் எங்களுக்கு நன்றாக பரிட்சையும் அடைந்ததாகும்.

pujara 1

ஆட்டத்தின் போக்கை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதை தீர்மாணம் செய்து வைத்துள்ளோம். ஹோம் அட்வாண்டேஜ் இருப்பது எங்களுக்கு இன்னும் கூடுதல் பலமே. எனவே அங்கு ஏற்பட்ட நிலமை இங்கு எங்களுக்கு ஏற்படாது. அங்கு நாங்கள் செய்த தவறை இங்கு திரும்ப செய்ய மாட்டோம்.ஆட்டத்தை முதல் பந்தில் இருந்து எங்கள் போக்கில் எடுத்து செல்வோம்.நிச்சயம் நங்கள் வெற்றி பெறுவோம் என்று புஜாரா இவ்வாறு கூறியுள்ளார்.

- Advertisement -

Pujara 2

புஜாரா கூறியது போல இந்தியா இங்கிலாந்து எதிராக வெற்றி பெற வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஜெயித்தால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் எனவே இந்திய அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி போட்டியை கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.