இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரராக இருந்து வருபவர் செத்தீஸ்வர் புஜாரா. இந்திய அணிக்குள் நுழைந்தபோது முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இருக்கு மாற்று வீரர் இவர்தான் என்று அறியப்பட்டவர். தற்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடரை தயாராகிக் கொண்டிருக்கும் அவர் தனது வாழ்வில் இந்திய அணியில் இடம்பிடிக்க பட்ட கஷ்டங்களைப் பற்றி பேசியுள்ளார்.

துவக்கத்தில் நன்றாக இருந்த இவர் கிரிக்கெட் வாழ்க்கை 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் நடந்த டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப் படும் அளவிற்கு மோசமாக சென்றது இது குறித்து பேசியுள்ளார் புஜாரா..
அதில் அவர் கூறியதாவது : நானும் மனிதன்தான் இந்திய அணியில் இடம்பிடிக்க நானும் மற்ற வீரர்களைப் போல கடினமாக உழைத்து உள்ளேன். டெஸ்டில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மிகவும் மனமுடைந்து போய் அமர்ந்துவிடவில்லை, எனது ஆட்டத்தில் எங்கு தவறு இருக்கிறது என்று கண்டுபிடித்து அதனை சரிசெய்ய பல மாதங்கள் மிகக் கடினமாக உழைத்தேன்.

பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக பயிற்சி செய்வேன். அதன் விளைவாக எனது ஆட்டத்தை மேம்படுத்தி அதன் பின்னர் இந்திய அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைத்தது. மேலும் இங்கிலாந்தில் நடந்த கவுண்டி கிரிக்கெட் தொடரிலும் சென்று அங்கு சில மேம்பாடுகளை செய்தேன். இவ்வாறு இந்திய அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் புஜாரா.



