160 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் மட்டும் அடிக்க இதுவே காரணம் – மனம்திறந்த புஜாரா

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை குவித்து இருந்தது. அதிகபட்சமாக கோலி 74 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி மேலும் 11 ரன்கள் சேர்த்த நிலையில் 244 ரன்களுக்கு இன்னிங்சை முடித்தது.

pujara 2

- Advertisement -

இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி துவக்கத்தில் அடுத்தடுத்து பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் போது இந்திய அணியின் தடுப்புச் சுவராக கருதப்படும் புஜாரா களம் இறங்கினார். கோலியுடன் சிறப்பான அமைத்த புஜாரா 160 பந்துகளை சந்தித்து 43 ரன்களை அடித்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியப் பவுலர்களின் பொறுமையை சோதித்த அவர் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் அவர் 148 பந்துகளை சந்தித்த பிறகே தனது முதல் பவுண்டரியை புஜாரா அடித்தார். அவரின் இந்த மெதுவான ஆட்டத்திற்கு விமர்சனங்கள் எழ துவங்கினாலும் அவரது நிதானமான ஆட்டம்தான் இந்திய அணியை ஓரளவுக்கு பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியது என்றே கூறலாம். இந்நிலையில் தான் ஏன் அவ்வளவு ஸ்லோவாக விளையாடினேன் என்பது குறித்து புஜாரா தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

துவக்க வீரர்கள் அடுத்தடுத்து விழுந்த நிலையில் அந்த நேரத்தில் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது டெஸ்ட் போட்டிகளில் மிக முக்கியமான விஷயம். அதற்காக நான் அந்த தருணத்தை உணர்ந்துதான் மெதுவாக விளையாடினேன். மேலும் அந்த நேரத்தில் விக்கெட்டுகள் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதன் காரணமாகவே எனது ஆட்டத்தை மிகவும் பொறுமையாக விளையாடினேன். இதனால் எனக்கு எந்தவித மன வருத்தமும் இல்லை. இந்திய அணி 244 ரன்களை முதல் இன்னிங்சில் குவித்துள்ளது.

Pujara-1

350 ரன்கள் குவித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் பேசிய அவர் : டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுத்த வரை பொறுமை என்பது மிகவும் அவசியம். போட்டி பவுலர்களுக்கு சாதகமாக போட்டி அமையும் போது நாம் அதிரடியாக அடித்து விளையாடுவது சாத்தியமில்லை. வெளிநாடுகளில் விளையாடும் போது 200 ரன்களுக்கு குறைவாக எடுப்பது சிறந்ததாக இருக்காது என்றும் புஜாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement