இதுக்கு மேல் கிரிக்கெட்டே வேணான்னு சொல்லிட்டேன். ரொம்ப அழுதேன் – என் வாழ்நாளின் கடினமான தருணம் இதுதான் – புஜாரா

Pujara-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிடுக்கு பிறகு அடுத்த தடுப்புச்சுவர் என்றால் அது புஜாரா என்றால் மிகையாகாது. கடந்த 2010ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது டெஸ்ட் கேரியரை தொடங்கிய புஜாரா இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6244 ரன்களை குவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் முக்கிய நபராக தவறாமல் இடம்பெற்று வரும் புஜாரா பல போட்டிகளில் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்துள்ளார்.

pujarashot

- Advertisement -

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். அதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கூட ஒரு அரை சதம் விளாசி இருந்தார். இந்நிலையில் தற்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவித்த கடினமான நாட்கள் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில் :

சர்வதேச கிரிக்கெட்டில் நான் அறிமுகமான பிறகு எனக்கு ஏற்பட்ட முதல் காயம் பெரிய வருத்தத்தை கொடுத்தது. ஏனெனில் நான் அடைந்த அந்த காயத்தில் இருந்து மீள எப்படியும் ஆறு மாதங்கள் ஆகும் என அணியின் பிசியோ கூறிவிட்டார். அவர் கூறிய அந்த வார்த்தைகளை கேட்டதும் நான் அந்த நொடியே அழுதுவிட்டேன். மேலும் இனி என்னால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியுமா ? என்ற சந்தேகம் கூட எனக்கு அப்போது இருந்தது. ஆனாலும் அந்த நேரத்தில் எனக்கு என்னுடைய குடும்பம் பக்கபலமாக நின்றது இருப்பினும் ஒரு பக்கம் காயம் குணமடைய நாட்கள் எடுத்துக் கொண்டதால் அப்போது ஏற்பட்ட அழுத்தத்தால் இனிமேல் நான் கிரிக்கெட் விளையாட போவதில்லை என்று கூட என் குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டேன்.

pujara 2

அவர்கள் என்னை தேற்றி நேர்மறையாக சிந்திக்கும் படி கூறினார்கள். அதன் பின்னர் எல்லாம் சரியாகி நான் அந்த அழுத்தத்தில் இருந்து விடுபட்டு சிறப்பாக விளையாட ஆரம்பித்தேன் என்று தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள புஜாரா இதற்கு முன்னர் இங்கிலாந்து மண்ணில் 9 போட்டிகளில் விளையாடி 500 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார்.

Cheteshwar Pujara

இங்கிலாந்து மண்ணில் அவரது அதிகபட்ச ரன்களாக 132 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் இங்கிலாந்தில் ஏற்கனவே கவுண்டி அணியில் விளையாடிய அனுபவம் உள்ளவர் என்பதால் நிச்சயம் உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு முக்கிய வீரராக புஜாரா செயல்படுவார் என்று நம்பலாம்.

Advertisement