நம்ம புஜாராவா இது ? நேற்றைய போட்டியில் அவர் ஆடிய விதத்தை கவனிச்சீங்களா ? – எப்படி இந்த மாற்றம்

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் விளையாடி வரும் இந்திய பேட்ஸ்மேன்கள் மீது அதிக விமர்சனங்கள் இருந்தாலும் குறிப்பாக புஜாராவின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி அவர் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

pujara 2

- Advertisement -

நடைபெற்று முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் சொதப்பிய புஜாரா அதற்கடுத்து இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்து வந்தன.

ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது 45 ரன்கள் குவித்த புஜாரா ரஹானேவுடன் இணைந்து 100 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு உதவியதால் இந்த மூன்றாவது போட்டியில் புஜாரா இடம் பெற்றார். இந்த மூன்றாவது போட்டியிலும் முதல் இன்னிங்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த புஜாரா தற்போது இரண்டாவது இன்னிங்சில் போது யாரும் எதிர்பாராத வகையில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே பந்துகளை வீணடித்து 50 க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் உடன் விளையாடி வரும் புஜாரா இந்த இரண்டாவது இன்னிங்சில் அதிக பந்துகளை சந்தித்து ரன்கள் குவிக்காமல் இருந்தால் அணிக்கு அழுத்தம் ஏற்படும் என்பதை சரியாக உணர்ந்து பவுண்டரிகளை விளாசினார். 180 பந்துகளை பிடித்த அவர் 15 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

pujara 2

இதன் மூலம் இந்த இரண்டாவது இன்னிங்சில் 50.56 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார். புஜாராவின் ஆட்டத்தை கவனித்த ரசிகர்கள் அவரது இந்த அதிரடியான பேட்டிங்கை வியப்பாக பார்த்து வருகின்றனர்.

Advertisement