அவரை பத்தி பேச வார்த்தைகளே இல்லை. எனக்கு எல்லா வித்தையும் கத்துக்கொடுத்தது அவர்தான் – புஜாரா ஓபன் டாக்

Pujara
- Advertisement -

இந்திய அணிக்கு 1996ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை விளையாடியவர் ராகுல் டிராவிட். இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவர். டெஸ்ட் போட்டிகளில் தனி ஆளாக நின்று எத்தனை நாள் வேண்டுமென்றாலும் நின்று ஆடும் திறமை பெற்றவர். தற்போது அவருடைய இடத்தை நிரப்பி வருபவர் புஜாரா.

Cheteshwar Pujara

அவரை போலவே இல்லை என்றாலும் கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டிகளுக்கு என்று தன்னை வடிவமைத்துக் கொண்டு உள்ளார் புஜாரா. இருவருமே நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடும் டெஸ்ட் போட்டிகளில் தனிச்சிறப்பு பெற்றவர்கள். இந்நிலையில் சத்தீஸ்வர் புஜாராவிடம் ராகுல் டிராவிட் பற்றிய சில கேள்விகள் கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு புஜாரா மிகவும் சுவாரசியமாகவும் ஓபனாகம் பதிலளித்தார். அவர் கூறுகையில்… ராகுல் டிராவிட்டிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். கிரிக்கெட் மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் எவ்வாறு தனித்தனியாக பிரித்து நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை அவரிடம் தான் கற்றுக்கொண்டேன்.

Dravid 1

அவரிடம் பேசும்போதெல்லாம் இது இரண்டையும் எப்படி பிரித்து கையாள்வது என்பதை எனக்கு புரியும்படி விளக்கினார். கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடும் போது ராகுல் டிராவிட் எவ்வாறு கிரிக்கெட் மற்றும் குடும்பத்தை இரண்டையும் ஒதுக்கி செயல்படுகிறார் என்பதை நேரிலேயே பார்த்து தெரிந்துகொண்டேன்.

- Advertisement -

அவரைப் பற்றி ஒரு வரியில் சொல்லி விட முடியாது எனக்கு அவர் ஊக்கமளித்தார். பல செயல்பாடுகள் இருக்கிறது. எங்களது இரு ஆட்டங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. சதம் அடிப்பது மட்டும் முக்கியமல்ல அணியின் வெற்றிக்கு பங்கு அளிப்பதுதான் மிகப் பெரிய விஷயம் என்று அவரிடம் நான் கற்றுக்கொண்டேன் இவ்வாறு கூறியுள்ளார்.

Pujara-2

புஜாரா இந்திய அணிக்காக 2010 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5840 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டிராவிட் விட்டுச்சென்ற இடத்தை இதுவரை சரியாக அவர் நிரப்பி உள்ளார் என்றே கூறலாம்.

Advertisement