நாங்க எந்த நாட்டுக்கு போனாலும் எங்களால இதை பண்ணமுடியும். அதை பாக்கத்தான் போறீங்க – கெத்தாக பேசிய புஜாரா

Pujara
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டன் நகரில் வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி யார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பெரிய விவாதமே எழுந்து வருகிறது.

INDvsNZ

- Advertisement -

அதில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நியூசிலாந்து அணிக்கு இங்கு போட்டியை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறிவருகின்றனர். ஏனெனில் இந்திய அணி இந்த போட்டிக்கு முன்னதாக 24 நாட்கள் வரை இந்திய அணி குவாரண்டின் இருக்க உள்ளது. அதனை தொடர்ந்து சில நாட்கள் பயிற்சியை மேற்கொண்டு இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது.

ஆனால் நியூசிலாந்து அணியோ இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி விட்டு இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளதால் மனரீதியாக நியூசிலாந்து அணிக்கு பலம் அதிகமாக இருக்கும் என்பதினால் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று தெரிவித்து வருகின்றனர்.

Pujara 1

இந்நிலையில் தற்போது உலகின் எந்த ஒரு இடத்திலும் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை இந்திய அணிக்கு உள்ளது என இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை பற்றி கூற வேண்டுமெனில் அவர்கள் அனைவரும் சரியான பலத்துடன் உள்ளனர். அவர்களின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது அவர்களை எப்படி கையாள வேண்டும் என்ற யுக்தியும் எங்களிடம் உள்ளது. நாங்கள் கடந்த முறை நியூஸிலாந்து அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் விளையாடி தோற்றோம்.

Cheteshwar Pujara

ஆனால் இம்முறை இரண்டு அணிகளுமே பொதுவான இடத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் எந்த அணிக்கும் சாதகம் கிடைக்காது. சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும் நாங்கள் எங்களுடைய அடிப்படையை சரியாக அமைத்துவிட்டால் உலகின் எந்த இடத்திலும் எந்த ஒரு அணியையும் வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது என புஜாரா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement