கவுண்டி கிரிக்கெட்டில் கோலி விளையாட இருந்த அணிக்கு தண்ணி காட்டிய பூஜாரா ..!

pujara

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரரான புஜாரா தனது மட்டை ஆட்டத்தால் எதிரணியை திணறடித்துள்ளார். இங்கிலாந்து யோர்க்கீஸ் அணியில் ஆடி வரும் புஜாரா தற்போது நடைபெற்று வரும் சர்ரே அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன்னை அடிக்க 42 பந்தை எடுத்துள்ளார்.
pujarashot

இந்திய அணி வீரர்கள் சிலர் இங்கிலாந்து நாட்டில் சென்ற மாதம் தொடங்கப்பட்ட கவுண்டி போட்டிகளில் விளையாட இங்கிலாந்து சென்றனர். இதில் யோர்க்கீஸ் அணியில் ஆட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வாகி இருந்தார். ஆனால், சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் இந்த தொடரில் பங்குபெறவில்லை.

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட ஏற்கனவே இங்கிலாந்து சென்று விட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் புஜாராவும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது கவுண்டி தொடரில் விளையாடி வரும் புஜாரா 10 இன்னிங்ஸ்களில் ஆடி வெறும் 132 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
Cheteshwar Pujara

இந்நிலையில் நேற்று (ஜூன் 25 ) நடந்த கவுண்டி தொடரின் டெஸ்ட் போட்டியில் யோர்க்கீஸ் அணியும் சர்ரே அணியும் மோதியது. இதில் யோர்க்கீஸ் அணியில் ஆடிய இந்திய வீரர் புஜாரா 111 பந்துகளில் 23 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதில் சிறப்பு என்னவெனில் புஜாரா தனது முதல் ரன்னை 42வது பந்தில் தான் அடித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரன் எதுவும் எடுக்காமல் பந்து வீச்சாளர்களின் பொறுமையை சோதித்துள்ளார் புஜாரா.