ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஹைடன் சொன்னதை அப்படியே நிறைவேற்றிய புஜாரா – என்ன ஒரு இன்னிங்ஸ்

pujarasad
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று துவங்கி விளையாடி வருகிறது. இன்று காலை 8:30 மணிக்கு அடிலெய்டு மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பதால் முதலில் பேட்டிங் செய்தால் மைதானம் சாதகமாக அமையும் என்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

INDvsAUS

- Advertisement -

அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சமீபத்தில் சொதப்பி வரும் ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். இதில் முதல் ஓவரை சந்தித்த ப்ரித்வி ஷா வழக்கம் போலவே தனது சொதப்பலான ஆட்டத்தை இந்த போட்டியிலும் வெளிப்படுத்தினார். தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே கிளீன் போல்டாகி வெளியேறிய அவர் மீண்டும் தன்னை தேர்வு செய்தது தவறு என்பதை உணர்த்திவிட்டு சென்றார்.

அதன்பின் அகர்வாலுடன் இணைந்த புஜாரா நங்கூரம் பாய்ச்ச துவங்கினார். ஒருபக்கம் அகர்வால் 40 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இருந்து வெளியேற மறுபுறம் தான் டெஸ்ட் கிரிக்கெட்டை எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை கற்றுத்தரும் வகையில் தனது பொறுமையான ஆட்டத்தை புஜாரா வெளிப்படுத்தினார். உணவு இடைவேளைக்குப் பின்னர் ஆட்டமிழந்த புஜாரா மொத்தம் 160 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளை குவித்து 43 ரன்கள் அடித்தார். அவரின் இந்த பொறுமையான இன்னிங்ஸ் ஆஸ்திரேலிய அணியை டயர் அடைய வைத்தது என்றே கூறலாம்.

pujara

அந்த அளவிற்கு எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதை சரியாக காண்பித்து விட்டு சென்றார். 160 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரிகளை மட்டுமே அடித்தது மட்டுமின்றி 26 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் உடன் ஆடியது எதிரணியை நிச்சயம் வெறுப்பை உண்டாக்கி இருக்கும். ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஹைடன் புஜாராவை எதிர்கொள்ளும் போது சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் எப்பேர்ப்பட்ட பவுலர்களையும் அவர் சிறப்பாக எதிர் கொள்வார் என்று கூறியிருந்தார்.

Pujara

அதுமட்டுமின்றி நிறைய பந்துகளை பிடித்தாலும் பொறுமையாக ஆடி எதிரணியின் பவுலர்களை அவர் கடுப்பேத்துறார் என்று கூறியிருந்தார். அதற்கேற்றார்போல் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை கிட்டத்தட்ட 30 ஓவர்கள் வீச வைத்து தனி ஒரு ஆளாக களத்தில் நின்று அவர் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement