புஜாரா தேர்வு செய்த சிறந்த டெஸ்ட் அணி. ரோஹித், ரஹானேவுக்கு இடமில்லை – அணி வீரர்களின் விவரம் இதோ

pujara

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்திய இந்த காலத்தில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் என பலதரப்பட்ட வீரர்களும் தங்களின் மிகச் சிறந்த அணிகளை வெளியிட்டு வந்தார்கள். தற்போது கடைசியாக இந்திய டெஸ்ட் அணியின் டெஸ்ட் அணி வீரர் புஜாரா உலகின் மிகச் சிறந்த அணி ஒன்றை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார்.

Cheteshwar Pujara

இதில் இந்திய வீரர்கள் பலருக்கு இவர் இடம்கொடுக்கவில்லை. மிகவும் கெடுபிடியாக தனது அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். துவக்க வீரர்களாக ஆஸ்திரேலியாவின் இடதுகை அதிரடி வீரர் டேவிட் வார்னர் மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். துவக்க வீரர்களாக இவர்களது இருவரையும் தேர்வு செய்யும் போது அணியில் ரோகித் சர்மாவை மறந்துவிட்டார் புஜாரா.

ரோகித் சர்மா தற்போது உலகின் மிகச்சிறந்த வீரராக இருக்கிறார் அதனை அடுத்து மூன்றாவது இடத்திற்கு தன்னை தானே தேர்வு செய்து கொண்டார் அவர். நான்காவது இடத்திற்கு இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். ஐந்தாவது இடத்திற்கு போனால் போகட்டும் என்று ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Warner

பொதுவாக ஸ்மித் மூன்றாவது இடத்தில் ஆடுவார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆறாவது இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் அந்த பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக இந்தியாவின் விருத்திமான் சஹா இருக்கும் வேளையில் நியூசிலாந்தின் பிஜே வாட்லிங்கை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபடா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 13 ஆவது வீரராக முகமது சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

rabada3

புஜாரா தேர்வு செய்த அணி இதோ : டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், வாட்லிங் (விக்கெட் கீப்பர்), ரவீச்சந்திர அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், பேட் கம்மின்ஸ், காகிசோ ரபாடா, ரவீந்திர ஜடேஜா (12வது வீரர்), முகமது ஷமி (13வது வீரர்).