இங்கிலாந்து டெஸ்ட் தொடர் : புஜாரா கண்டிப்பா விளையாட மாட்டார் – அவருக்கு பதில் ஆடப்போறது இவர்தான்

Pujara-1
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி போதிய பயிற்சி ஆட்டம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தது.

INDvsENG 1

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்திடம் பேசி தற்போது கவுண்டி அணியுடன் மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்த பயிற்சி ஆட்டத்தில் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரஹானே ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் ரோஹித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்த போட்டியில் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடிய ரோஹித் 9 ரன்களிலும், அகர்வால் 28 ரன்களில் வெளியேறினர். அதன்பின்னர் புஜாரா இந்த பயிற்சி போட்டியில் சிறப்பாக ஆடினால் தான் இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த விகாரியும் 24 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி நெருக்கடியில் சிக்கியது. அப்போது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ராகுல் மற்றும் ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

Pujara

இறுதியாக ராகுல் சதம்(101*) அடித்து ரிட்டையர்ட் ஹர்ட் மூலம் பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் ஜடேஜாவும் 75 ரன்கள் குவிக்க இந்திய அணி 311 ரன்கள் என்ற டீசன்டான ரன் குவிப்பை வழங்கியது. இந்நிலையில் இந்த பயிற்சி போட்டியிலாவது சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்த்த வேளையில் புஜாரா மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு புஜாரா அணியில் இருந்து நீக்கப்படுவார் என்ற செய்தி வெளியாகியது.

Rahul

மேலும் அவருக்கு பதில் ராகுல் சேர்க்கப்படுவார் என்று கூறப்பட்டது. அப்படி ஒரு சூழல் நிலவும் வேளையில் மீண்டும் புஜாரா சொதப்பி உள்ளதாலும், ராகுல் சதம் அடித்து உள்ளதாலும் நிச்சயம் ராகுலுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் புஜாரா இடத்தில் அவர் விளையாடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement