புஜாராவா இது நம்பவே முடியலையே ? இன்னைக்கு மேட்ச் என்ன பண்ணாரு தெரியுமா ? – விவரம் இதோ

Pujara-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் துவங்கியுள்ளது.

Pujara 1

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி தீநீர் இடைவேளை வரை 2 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்துள்ளது. அகர்வால் 86 ரன்களுடனும், கோலி 0 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

இந்த போட்டியில் மூன்றாவது வீரரான புஜாரா 58 ரன்கள் அடித்து தனது 22வது அரைசதத்தை பூர்த்தி செய்து வெளியேறினார். இந்த போட்டியில் புஜாராவின் பேட்டிங் ரசிக்கும்படி இருந்தது ஏனெனில் இது நாள் வரை புஜாரா பேட்டிங் செய்யும் பொழுது அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிக பொறுமையாக இருக்கும். மேலும் அவர் ஒரு ஆமை வேக ஆட்டக்காரர் என்று பெரும்பாலும் ரசிகர்கள் அறியப்பட்டு வந்தார். இந்நிலையில் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக ஆடி வரும் புஜாரா முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக சில சிக்சர்களை அடித்தார்.

Pujara

அதே போன்று இன்றைய போட்டியிலும் துவக்கத்தில் பொறுமையாக ஆடிய அவர் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து விளாசினார். மேலும் இந்த போட்டியில் அடித்தால் ஒரு சிக்சர் மூலம் அவர் தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸில் சிக்சர் அடித்து தனது அதிரடி தற்போது வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு முன்னதாக அவர் தொடர்ந்து இரண்டு இன்னிங்சில் சிக்சர்கள் அடித்து கிடையாது. பொதுவாக அவர் சிக்ஸ் அடிப்பது என்பதே அரிதான விடயம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது புஜாரா அதிரடியாக விளையாடி வருவதை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று வருகின்றனர்.

Advertisement