பயிற்சியின் போது முழங்கையில் ஏற்பட்ட பலத்த காயம் – பாதியிலேயே வெளியேறிய இந்திய வீரர்

IND
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் கடைசி இரண்டு போட்டிகள் வரும் 7-ஆம் தேதி முதல் துவங்க உள்ளன. இந்த தொடருக்கான மூன்றாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளதால் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியில் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏகப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வெளியேறியுள்ளனர். ஏற்கனவே முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில் இஷாந்த் ஷர்மா, சைனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வந்தனர். இதில் ரோஹித் மட்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில் மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது மேலும் இந்திய அணியை அச்சபடுத்தும் வகையில் இன்றைய பயிற்சியின்போது இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் மூன்றாவது இடத்தில் இறங்கி விளையாடும் பேட்ஸ்மேனான புஜாரா தனது வலது முழங்கையில் பலத்த காயம் அடைந்தார். வலைப்பயிற்சியில் தான் எதிர்கொண்ட பந்தின் மூலம் அடி வாங்கிய அவர் உடனடியாக பயிற்சியில் இருந்து வெளியேறினார்.

pujara 2

அதன் பின்னர் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் பயிற்சிக்கு திரும்பியவர் பயிற்சியை ஆரம்பித்தார். இருப்பினும் அவரது காயத்தின் தன்மை குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஷமி, உமேஷ் யாதவ் என அடுத்தடுத்த வீரர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேறி நிலையில் புதிதாக புஜாராவுக்கு ஏற்பட்டுள்ள காயம் வருத்தம் அடைய வைத்துள்ளது.

Pujara

ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முக்கிய பங்காற்றும் புஜாரா வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரராவார். அதுமட்டுமின்றி ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் விளையாடிய வீரர்களில் அனுபவம் உடைய வீரராக பார்க்கப்படும் புஜாரா ஒருவேளை விளையாடாமல் போனால் அது இந்தியா மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement