இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ரஹானே ஆகியோர் அது சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அஸ்வின் சதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 482 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின்போது புஜேரா இன்று காலை மீண்டும் அதிர்ஷ்டம் இன்றி ஆட்டம் இழந்து வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் எப்போதுமே நிலைத்து நின்று ஆடும் புஜாரா முதல் இன்னிங்சில் 21 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதுவும் இவர் ஆட்டமிழந்தது அவரது விக்கெட் அதிர்ஷ்டமின்றி விழுந்தது என்றே கூறலாம்.
Pujara with the weirdest runout I’ve seen in a while. #INDvsENG #INDvENG pic.twitter.com/VGR9R6lYuT
— Brendan Bradford (@1bbradfo) February 15, 2021
ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியின் போது பந்தை அடிக்க முயன்று அது பீல்டர் தலையில் பட்டு மற்றொரு வீரர் மூலம் கேட்ச் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏறிவந்து பந்தை ஸ்டோக் வைத்த புஜாரா மீண்டும் கிரீசுக்கு திரும்பும்போது பேட் கிரீசுக்கு முன்னர் சிக்கி பேட்டை தவறவிட்டார்.
அதன் பின்னர் சுதாரித்து காலை கிரீசுக்குள் வைப்பதுக்குள் அவரை ஷாட் கவர் திசையில் இருந்த பீல்டர் ரன் அவுட் செய்துவிட்டார். இப்படி இந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது முறையாக அதிர்ஷ்டமின்றி புஜாரா ஆட்டமிழந்துள்ளது வருத்தம் அளித்துள்ளது. அவர் அவுட் ஆன இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது