ஃபார்ம் இல்லனாலும் அனுபவம் பேசும்.. இதை செஞ்சா விராட் கோலி ஆஸியில் மிரட்டுவாரு.. புஜாரா பேட்டி

- Advertisement -

பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல அந்தத் தொடரில் இந்தியா 4 வெற்றிகளை பெறும் லட்சியத்துடன் விளையாட உள்ளது. ஆனால் விராட் கோலி சுமாரான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஃபார்மில் இல்லை என்றாலும் கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவில் அபாரமாக விளையாடிய அனுபவம் விராட் கோலிக்கு உதவும் என்று புஜாரா தெரிவித்துள்ளார். அத்துடன் முதல் 2 போட்டிகளில் சதத்தை அடித்தால் அந்த அனுபவத்தை வைத்து இம்முறை ஆஸ்திரேலியாவில் விராட் கோலி பெரிய ரன்கள் என்றும் புஜாரா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

புஜாரா நம்பிக்கை:

“கடந்த கால அனுபவங்கள் கண்டிப்பாக அவருக்கு உதவும். ஆஸ்திரேலியாவில் அவர் அடித்துள்ள ரன்களே விராட் கோலியின் தரத்தை பேசும். ஆஸ்திரேலியா மட்டுமின்றி அனைத்து இடங்களில் அசத்தியுள்ள அவர் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைக்கக்கூடிய அவர் நீண்ட காலமாக அசத்தி வருவதை பார்க்கிறோம். இருப்பினும் தொடர்ச்சியாக விளையாடும் போது இயற்கையாக உங்களுடைய உடலில் வீழ்ச்சி ஏற்படும்”

“இருப்பினும் தற்போது கொஞ்சம் ஓய்வு எடுத்துள்ள அவர் மனதளவிலும் உடலளவிலும் நல்ல இடத்தில் இருப்பார். ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் எதிரணியினர் அவரை செட்டிலாக விட மாட்டார்கள். ஆனால் அதற்கு விராட் கோலி வலுவாக பதிலடி கொடுத்து தன்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவார். அவருடைய கேரியரின் ஆரம்பம் முதலே இந்த அணுகுமுறையே அவருடைய வெற்றிக்கான சாவியாக இருக்கிறது”

- Advertisement -

விராட் கோலியின் அனுபவம்:

“முதல் 2 போட்டிகள் மிகவும் முக்கியமானது. அந்தப் போட்டிகளில் அவர் களத்தில் போதுமான நேரத்தை செலவிடுவது மீண்டும் ஃபார்முக்கு திரும்ப உதவும். தன்னுடைய ஆட்டத்தை நன்றாக அறிந்துள்ள அவர் தேவைப்படும் போது நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவார். அதற்காக நன்றாக தயாராகியுள்ள அவர் மற்ற வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக முன்னின்று விளையாடுவார்”

இதையும் படிங்க: ஆஸியில் அசத்த கில் இதை தவிர்க்கனும்.. ராகுல் 3வது இடத்தில் விளையாடனும்.. புஜாரா அட்வைஸ்

“ஒருவேளை ஆரம்பக்கட்ட போட்டிகளில் 50 – 60 போன்ற ரண்களை குவித்து அதை சதமாக மாற்றினால் விராட் கோலிக்கு இந்தத் தொடர் அற்புதமாக அமையும்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலி ஆஸ்திரேலியாவில் 1300க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தியுள்ளார். எனவே ஒரு நல்ல இன்னிங்ஸ் அவர் மீண்டும் ஆஸ்திரேலியாவில் அசத்துவதற்கான ஃபார்மை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement