- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஸ்டார்க்கிடம் தப்பிக்க சச்சின் மாதிரி ராகுல் முடிவெடுக்கனும்.. ஜெய்ஸ்வாலிடம் இதை சொல்லுங்க.. புஜாரா 2 அட்வைஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் காபா கிரிக்கெட் மைதானத்தில் 3வது போட்டி நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 101, டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடும் இந்தியா 3வது நாள் முடிவில் 51-4 என தடுமாறி வருகிறது. அதனால் இந்தப் போட்டியில் தோல்வியிலிருந்து இந்தியாவை மழை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக முதல் போட்டியில் 161 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜெயஸ்வால் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஸ்டார்க்கிடம் திணறல்:

ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் மிட்சேல் ஸ்டார்க்கிடம் 0, 4 ரன்களில் அவர் ஆரம்பத்திலேயே அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இந்நிலையில் 2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொண்டால் சேவாக் அவுட்டாகி விடுவார் என்று உணர்ந்த சச்சின் முதல் ஓவரை தாமே எதிர்கொண்டார். அதே போல இத்தொடரில் ஸ்டார்க்கை சமாளிக்க முதல் ஓவரை ஜெயஸ்வாலுக்கு பதிலாக ராகுல் எதிர்கொள்ள வேண்டும் என்று புஜாரா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ராகுலை பார்த்து ஆஸ்திரேலியாவில் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் டிரைவ் அடிக்க முடியாது என்று யாராவது ஜெய்ஸ்வாலிடம் சொல்ல வேண்டும். அவர் ஃபுல்லர் பந்துகளை தேடுகிறார். அதில் ரன்கள் அடிக்க முடியும் என்றாலும் புதிய பந்துக்கு எதிராக டிரைவ் அடிப்பது கடினம்”

- Advertisement -

புஜாரா 2 அட்வைஸ்:

“மாறாக ராகுல் போல பந்து உங்களுடைய உடலுக்கு அருகே தரையில் படும் போது தான் டிரைவ் அடிக்க வேண்டும். யாராவது அவரிடம் இந்த மன நிலைக்கு மாற வேண்டும் என்று சொல்லுங்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் சில பந்துகளில் தடுப்பாட்டத்தை விளையாடி பின்னர் ரன்கள் குவிப்பதில் பிரச்சனையில்லை. இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஸ்டார்க் அபாரமாக பந்து வீசுகிறார்”

இதையும் படிங்க: உனக்கு அறிவில்ல.. இப்படியா பண்ணுவ.. ஆகாஷ் தீப்பை திட்டிய ரோஹித் சர்மா – என்ன நடந்தது?

“புதிய பந்தில் அவருடைய கட்டுப்பாடு நிறைய முன்னேறியுள்ளது. அதனால் இத்தொடரில் அவர் தான் உயர்ந்து நிற்கக்கூடிய பவுலராக இருப்பார் என்று நான் கருதுகிறேன். அவருக்கு எதிராக ஜெயஸ்வால் முதல் ஓவரில் நிறைய சிரமத்தை சந்திக்கிறார். எனவே அவருக்கு எதிராக முதல் ஓவரில் ராகுல் ஸ்ட்ரைக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே அவரிடம் அவுட்டாகிறார்” என்று கூறினார்.

- Advertisement -