- Advertisement -
இந்திய கிரிக்கெட்

க்ளீன் போல்டாவதை தவிர்க்க ரோஹித் இந்த டெக்னிக்கை மாற்றி.. தியாகம் செஞ்சாகனும்.. புஜாரா அட்வைஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது. அந்தப் போட்டியில் தோல்வியை சந்திக்க ரோஹித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் தாக்கத்தை ஏற்படுத்தாதது முக்கிய காரணமாக அமைந்தது.

சமீபத்திய நியூசிலாந்து தொடரிலும் பெரிய ரன்கள் எடுக்காத அவர் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். குறிப்பாக ஆரம்பத்திலேயே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் கிளீன் போல்டாவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் இரண்டாவது போட்டியில் தம்முடைய ஓப்பனிங் இடத்தை ராகுலுக்கு விட்டுக் கொடுத்த அவர் மிடில் ஆடரில் களமிறங்கி சுமாராக விளையாடினார்.

- Advertisement -

புஜாரா அட்வைஸ்:

எனவே ரோஹித் ஃபார்முக்கு திரும்ப வேண்டுமெனில் மீண்டும் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அணிக்காக தனது ஓப்பனிங் இடத்தை தியாகம் செய்து ரோகித் தொடர்ந்து மிடில் ஆர்டரில் விளையாடுவதே சரியான முடிவு என்று புஜாரா தெரிவித்துள்ளார். மேலும் கிளீன் போல்டாவதை தவிர்க்க ஸ்டம்ப் லைன் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளும் டெக்னிக்கில் ரோஹித் பயிற்சி எடுக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி புஜாரா பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்துக்கு எதிராக பெரிய ரன்கள் குவிக்காத ரோஹித் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நன்றாக துவங்கவில்லை. எனவே அவர் கொஞ்சம் அழுத்தத்தில் இருக்கிறார். ஆனால் தன்னுடைய ஆட்டத்தை நன்றாக தெரிந்த ரோகித் சர்மா போன்றவர் நேர்மறையாக இருந்து தன்னுடைய ஃபுட் ஒர்க்கில் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும்”

- Advertisement -

ஸ்டம்ப் லைன்:

“அவருடைய கால் நகர்வு கொஞ்சம் பெரிதாக இருந்தால் அது அவருக்கு உதவும். மேலும் ஸ்டம்ப் லைன் அவருக்கு அதிகமான தொல்லையை கொடுக்கிறது. அதனாலேயே அவர் போல்ட், எல்பிடபுள்யூ முறையில் அதிகமாக அவுட்டாகிறார். எனவே அந்த லைனில் அவர் வலைப்பயிற்சியில் அதிகமாக வேலை செய்ய வேண்டும். ஏனெனில் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் நன்றாக விளையாடுகிறார்”

இதையும் படிங்க: 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்று வரும் பயிற்சியை தவிர்த்த பும்ரா – அதற்கான காரணம் என்ன?

“அதே போல இந்திய அணியில் ராகுல், ஜெய்ஸ்வால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர் தொடர்ந்து 6வது இடத்தில் விளையாட வேண்டும். ஏனெனில் முதல் போட்டியில் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். சுப்மன் கில் 3வது இடத்தில் விளையாடுவார். எனவே நீண்ட கால திட்டத்தை கருத்தில் கொண்டு ரோகித் தொடர்ந்து 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -