2024இல் 125 கோடி கொடுத்த பிசிசிஐ.. 2011 உ.கோ வென்ற இந்திய அணிக்கு கொடுத்த பரிசுத்தொகை எவ்வளவு?

2024 and 2011 Indian Team
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 20 அணிகள் விளையாடின. ஆனால் அந்த அணிகளை விட சிறப்பாக விளையாடிய இந்தியா இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.

அதனால் 17 வருடங்கள் கழித்து 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சாதனை படைத்தது. மேலும் கடந்த 2013க்குப்பின் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக சந்தித்து வந்த தோல்விகளையும் இந்தியா உடைந்துள்ளது. அதன் காரணமாக இத்தொடரை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு 125 கோடி என்ற பிரம்மாண்ட பரிசு தொகையை பிசிசிஐ அறிவித்தது.

- Advertisement -

2011 பரிசுத்தொகை:
சொல்லப்போனால் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் 20.58 கோடிகள் மட்டுமே பரிசாக கொடுக்கப்பட்டது. ஆனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றதன் காரணமாக தங்களுடைய அணிக்கு 125 கோடி என்ற உலகமே திரும்பிப் பார்க்கும் பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து வென்றதற்கே இப்படியானால் 28 வருடங்கள் கழித்து 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ எவ்வளவு பரிசு கொடுத்திருக்கும் என்பதை தெரிந்து கொள்வது சுவாரசியமானதாக இருக்கும்.

ஆம் கபில் தேவ் தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்தியா அதன் பின் முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் தலைமையில் விளையாடியும் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது. இருப்பினும் 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தோனி தலைமையில் அசத்திய இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

அதன் காரணமாக அந்த சமயத்தில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்த ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா 2 கோடி ரூபாயை பிசிசிஐ பரிசாக வழங்கியது. அத்துடன் உலகக் கோப்பை வென்ற அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு பரிசுத்தொகைப் போக போனஸாக தலா 25 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது. அது போக கேரி கிறிஸ்டன் உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்கு தலா 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: ரோஹித் சர்மாவை பாத்து கத்துக்கோங்க பாபர் அசாமை மறைமுகமாக கடிந்த ஷாஹித் அப்ரிடி – விவரம் இதோ

அந்த வகையில் 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அந்த காலகட்டத்தில் மொத்தம் 39 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மொத்தத்தில் உலகின் பணக்கார வாரியமாக கருதப்படும் பிசிசிஐ அன்றும் இன்றும் ஐசிசி கொடுக்கும் தொகையை விட அதிகமான பரிசுத்தொகையை கொடுத்து இந்திய அணியை ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement