சுப்மன் கில்லுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததில் தப்பே இல்ல.. ஆதரவு தெரிவித்து பதிவை வெளியிட்ட – பிரியங்க் பஞ்சால்

Priyank Panchal
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 நாடுகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இந்த தொடரில் இடம் பிடித்துள்ள எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றனர். அதற்கான அட்டவணையும் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

சுப்மன் கில்லுக்கு ஆதரவு தெரிவித்த பிரியங்க் பஞ்சால் :

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அணியில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனும், இளம் நட்சத்திர வீரருமான சுப்மன் கில் மீண்டும் டி20 போட்டிகளுக்கு கம்பேக் கொடுத்ததோடு மட்டுமின்றி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டது பலரது மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கடந்த 2024-ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக கடைசியாக டி20 போட்டியில் சுப்மன் கில் விளையாடி இருந்தார். அதற்கு அடுத்து கடந்த பல தொடர்களாகவே சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட அணியே தொடர்ச்சியாக விளையாடி வந்தது. அந்த தொடர்களில் எல்லாம் அக்சர் பட்டேல் துணை கேப்டனாக இருந்து வந்தார்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் படேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி கில் வைஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பல்வேறு பேச்சுகள் இருந்து வந்தாலும் எதிர்கால இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டது சரிதான் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பிடித்தது சரியான ஒன்றுதான் என்றும் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என முன்னாள் இந்திய வீரர் பிரியங்க் பஞ்சால் தனது கருத்தினை சமூகவலைதள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடதாவது : கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களில் 150-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2000 ரன்களுக்கு மேல் சுப்மன் கில் குவித்துள்ளார். அவருடைய பேட்டிங் டெக்னிக் டி20 போட்டிகளுக்கு ஏற்ற ஒன்றாகவே உள்ளது.

இதையும் படிங்க : சுப்மன் கில்லை சேத்தது எல்லாம் சரிதான்.. ஆனா அந்த 2 பேரை ஏன் சேக்கல – கேள்வியை தூண்டியுள்ள அணித்தேர்வு

அதனால் அவருக்கு ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். சுப்மன் கில்லுக்கு இப்படி திடீரென துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டதும், டி20 அணியில் அவர் மீண்டும் இடம் பெற்றதும் விவாதிக்கப்படும் விடயமாக மாறியுள்ள வேளையில் அவருக்கு ஆதரவாக பிரியங்க் பஞ்சால் இந்த பதிவினை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement