டிராவிட்டின் பயிற்சியில் வளர்ந்த நான் இவரைப்போன்று சூழ்நிலையை கணித்து கணித்து விளையாட விரும்புகிறேன் – அண்டர் 19 கேப்டன் பேட்டி

Garg

தற்போது இந்திய அணியின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக இருப்பவர் பிரியம் கார்க். இவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் .சமீபத்தில் தனியார் வலைதளம் ஒன்றிற்கு கிரிக்கெட் தொடர்பான விஷயங்கள் பற்றி பேசியவர், தான் எப்படி கிரிக்கெட்டிற்கு வந்தேன் என்றும் எதிர்காலத்தில் யாரை போன்று விளையாட விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

priyam-garg

தற்போது கரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் இல்லாமல் வெறும் மூடிய மைதானத்தில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தற்போது நான் கேப்டனாக இருக்கிறேன். அண்டர்-19 உலக கோப்பை தொடரை முதன்முதலில் வென்றவர் முகமது கைஃப் தான்.

நான் கிரிக்கெட் விளையாடும்போது எதிரணி வீரர்களை பார்த்து திட்டியது உண்டு. ரஞ்சி கோப்பை அணிக்காக ஆடும் போதும் இந்திய அணிக்காக ஆடும் போதும் இதனை நான் செய்திருக்கிறேன். இது மிகவும் சாதாரண விஷயம் மனவலிமையை எப்போதும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் எதிரணி வீரர்களை பெரிதாகத் தாக்கிவிடக் கூடாது என்று நினைப்பவன் நான்.

Priyam-Garg

நான் கிரிக்கெட் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விளையாடுவேன். சச்சின் டெண்டுல்கரை எவ்வாறு சூழ்நிலைக்கேற்றவாறு ஆட வேண்டும் என்று கற்றுக் கொண்டிருக்கிறேன். எந்த சூழ்நிலையில் எப்படி விளையாட வேண்டும் என்று அவர் அனைவருக்கும் நன்றாக புரிய வைத்திருக்கிறார்.

- Advertisement -

ind u 19

அதேபோல் ஆட்டத்தின்போது சிறப்பான எனது ஆட்டத்தை வெளிப்படுத்த சிறப்பாக முயற்சி செய்கிறேன் எங்களுக்கு. பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டிடம் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் இவர்களைப் போல ஆட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன் இவ்வாறு கூறுயுள்ளார் ப்ரியம் கார்க்.