பால் வியாபாரியின் மகனை அண்டர் 19 இந்திய அணிக்கு கேப்டனாக்கிய அணி நிர்வாகம் – உலககோப்பைக்கு டீம் ரெடி

Priyam

தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான 19 வயதுக்குட்பட்டோர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பிரியம் கார்க் என்ற இளம் வீரர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ind u 19

இவர் கேப்டனாக தெரிவு செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் யாதெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் ஒரு இரட்டை சதம் மற்றும் இரண்டு சதங்கள் அதுமட்டுமின்றி ஐந்து அரை சதங்கள் அடித்து அந்த தொடரில் மொத்தம் 867 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்தார் பிரியம் கார்க்.

ராகுல் ட்ராவிடின் கிரிக்கெட் வளர்ப்பினால் உருவாகியுள்ள நம்பிக்கை நட்சத்திரமான இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த வீரராவார். இவரின் தந்தை ஒரு பால் வியாபாரி என்றும் வீட்டுக்கு வீடு சென்று பால் விநியோகம் செய்வதும் பள்ளி வாகனம் மற்றும் சரக்கு வாகனம் ஓட்டுவது என கடுமையாக உழைத்த தந்தை என்று தனது அப்பா குறித்து பிரியம் கார்க் தெரிவித்துள்ளார். மேலும் 2011ஆம் ஆண்டு தனது தாயை இழந்த இவர் அப்பாவின் பரப்பிலேயே மிகக் கடினப்பட்டு கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

priyam garg

அனைத்து வீரர்களைப் போலவே எனக்கும் சச்சின் தான் உத்வேகம் அளித்ததாகவும் வீட்டில் டிவி இல்லை என்றால் கூட அருகில் இருக்கும் இடங்களுக்கு சென்று சச்சின் விளையாடும் போட்டிகளை பார்ப்பேன் மேலும் என் தந்தை எனக்காக நிறைய தியாகங்களை செய்துள்ளார். அவரது கனவுகளை நிறைவேற்ற நான் சாதிக்க வேண்டும் கண்டிப்பாக நான் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றியதோடு இந்திய அணியிலும் இடம் பிடிப்பேன் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -